மஷ்ரூம் அடை -- சமையல் குறிப்புகள்
மஷ்ரூம் அடை தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், பட்டன் மஷ்ரூம் - 100 கிரா...
மஷ்ரூம் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், பட்டன் மஷ்ரூம் - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பட்டை - லவங்கம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதில் தேங்காய் துருவல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி உப்பு, பட்டை - லவங்கம் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். பட்டன் மஷ்ரூமைப் பொடியாக நறுக்கி, மாவுக் கலவையில் சேர்த்து அடை மாவுப்பதத்தில் கலக்கவும். ஒரு தவாவில் மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த அடைக்கு, புதினா சட்னி நல்ல காம்பினே ஷன்.
மஷ்ரூம் அடை: மஷ்ரூமுடன் சிறிதளவு பரங்கிக்காய், முருங்கை கீரை சேர்த்து செய்தால், கலர்ஃபுல்லாகவும், டபுள் சுவையுடனும் இருக்கும்.
Post a Comment