வால்நட் முந்திரி பர்ஃபி தேவையானவை: வால்நட் பருப்பு - ஒரு கப், முந்திரி - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், ...
வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை: வால்நட் பருப்பு - ஒரு கப், முந்திரி - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - அரை கப்.
செய்முறை: வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும். இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது
வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.
Post a Comment