'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!!

புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம்...

புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக்கொண்டு பலர் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வழிமுறைகள் குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப் 10 டிப்ஸ்... பட்ஜெட்&கார் தேர்வு: செகண்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்தபின்,பட்ஜெட்டிற்கும்,குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும்,தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய ரக ஹேட்ச்பேக் கார் போதுமானது.அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு எஸ்யூவி மாடல்கள் பொருத்தமாக இருக்கும்.அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம். மார்க்கெட் நிலவரம்: நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம்.காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விற்பனையாளர் தேர்வு: பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.எனவே,நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம். மாருதி,ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன. பைனான்ஸ்: பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன.காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள்,டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு,அதி்ல் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். டெஸ்ட் டிரைவ்: விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும்.உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால்,கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம்.தவிர,கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியது என்பதும் அறிந்து கொள்வது அவசியம். அதன் மைலேஜ்,காரின் முந்தைய உரிமையாளர்கள் பற்றிய விபரங்களையும் விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.பளபளப்பாக இருக்கும் கார்களை கண்டு ஏமாந்துவிடாதீர்கள். ஏனேனில்,சில விபத்துக்குள்ளான கார்களை சரிசெய்து,ரீப்பெயிண்டிங் அடித்து பளபளப்பாக விற்பனைக்கு வைத்திருப்பர். காரின் ஜாதகம்: காரை தேர்வு செய்தபின்,அதன் பதிவுபுத்தகம் (ஆர்.சி.,புக்),சாலை வரி செலுத்தியதற்கான ரசீது,இன்ஷ்யூரன்ஸ்,ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால்,கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி.,புத்தகத்தில் ஹைப்பத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால்,விற்பனையாளரிடம் அதை ஆர்.டி.ஒ.,அலுவலகத்திலிருந்து நீக்கி தர சொல்லுங்கள். ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும்,காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும். காரின் வரலாறு : பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில்,திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே,காரின் சர்வீஸ் புத்தகம்,டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து காரின் வரலாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால்,நம்பிக்கையான,நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள்.அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கார் டீல்: காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு,காரை வாங்க முடிவு செயதபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள்.காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால்,உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம். பதிவு மாற்றம்:காரை வாங்கும்போது,அதனுடன் சேர்த்து காரின் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் வாங்கிவிடுங்கள்.மேலும்,பழைய உரிமையாளரிடமிருந்து,உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29,காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். http://www.tn.gov.in/sta/ApplicationForms.html என்ற வெப்சைட் முகவரியிலிருந்து மேற்கண்ட பார்ம்களை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். மேற்கண்ட விஷயங்களை கவனத்தில்கொண்டால் நிச்சயம்,அருமையான செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம்.

Related

Dengue Fever Remedy ---உபயோகமான தகவல்கள்,

PASS THIS  INFORMATION TO AS MANY   AS YOU CAN, IT MAY SAVE LIVES. Dengue Fever RemedyI would like to share this interesting discovery from a friend's classmate's son who has &nbs...

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பலரும், கடைசிநேர நெருக்கடிகளுக்குள்ளாகி, வாய்ப்பை கோட்டைவிடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில்தான். ஏனெனில், பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் எ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 4:13:29 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,513

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item