சிலருக்கு முடி கருமையாக இல்லாமல் தங்க கலரில் மின்னும். அது அழகுனு நினைக்கிறவங்க அப்படியே விட்டு விடலாம் எந்த பாதிப்புமில்லை.(சிலருக்கு நோய...

சிலருக்கு முடி கருமையாக இல்லாமல் தங்க கலரில் மின்னும். அது அழகுனு நினைக்கிறவங்க அப்படியே விட்டு விடலாம் எந்த பாதிப்புமில்லை.(சிலருக்கு நோய் காரணமாகவும் வரலாம். அப்படியுள்ளவர்கள் மருத்துவரை அனுகவும்) ஆனால் கருமையாக மாற்றனும் என்று ஆசைபடுபவர்களுக்கு ஓரு சில டிப்ஸ்
ஆமணக்கு எண்ணெயினை தலையில் விட்டு நல்ல மசாஜ் செய்து பின்பு குளிக்கவும். சில மாதங்களில் செம்பட்டை நிறம் கருமையாக மாறும்.
தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும்.
நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக தலையில் ஊறிய பின்பு குளிக்கவும்.
தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும்.
ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.'
தினமும் உணவில் கீரை வகைகளும், செம்பருத்தி பூவும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
Post a Comment