புதினா கீரையின் சத்துக்கள்!

எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, புதினாவைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடலின் அனைத்து உறுப்புக்களும் உற்சாகம் அடையும்படி செய்யும் புதின...

எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, புதினாவைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடலின் அனைத்து உறுப்புக்களும் உற்சாகம் அடையும்படி செய்யும் புதினாக் கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் குடல்பிணிகளை நீக்கும். சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும். சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும். கபநோயும், வயிற்றுப்போக்கும் நீங்கும். கீல் வாத நோய்கள் கட்டுப்படும். கண் நோய்கள் நிவர்த்தியாகும். கர்ப்பகால வாந்திக்குச் சிறந்த நிவாரணியாகும். தலைவலி, நரம்பு வலி, கீல்வாத வலிகளுக்குப் பயன்படுத்தினால் நோய்கள் நிவர்த்தியாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் பெரும்பாடுகளை நீக்குகிறது. சருமப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகிறது. பொதுவில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுகிறது. புதினா: சத்துக்கள்: புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அசைவ உணவு எளிதில் செரிமானமாக: அசைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆகாரம் எளிதில் செரிமானம் ஆகி விடுகிறது. கொழுப்புப் பொருள்கள் மிக விரைவில் ஜீரணம் ஆவதற்கு உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு தினங்களுக்குக் குறையாமல் உபயோகிக்க பல நன்மைகளை அடையலாம். தாய் சேய்க்கு நல்ல போஷாக்கு: கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது. இதன் மூலம் நல்ல போஷாக்கை அடையலாம். தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும் புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். வாந்தியை வராமல் தடுக்கும். வாந்தி வந்தால் உடனே வாந்தி நிற்கும். புதினாக்கீரையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டால் _ தொடர்ந்து நீடிக்கும் விக்கல் குணமாகும். தலைவலி நீங்க... புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். புதினா கஷாயம்: புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும். புதினாகஷாயம்: 25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும். மசக்கை வாந்தி நிற்க: புதினா இலைச்சாறு தேவையான அளவு சேகரித்து ஒரு பாத்திரத்தில் விட்டு வெல்லம் சேர்த்து வினிகர் சிறிதளவு சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு வாந்தி, குமட்டல் வரும் போது சிறிதளவு வாயில் விட்டு நாக்கால் சுவைத்துக் கொண்டிருந்தால் மசக்கை, மற்றும் இதர காரணங்களால் ஏற்படும் வாந்தி நின்று விடும். புதினா சர்பத்து : புதினா இலைச்சாறு 100 கிராம், சிவப்புக் கடுகு 40 கிராம், படிக்காரத்தூள் 300 கிராம், வினிகர் 450 கிராம் இவைகளை ஒன்று சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டியதும் வடிகட்டி எடுத்துக் கொண்டு, பிறகு தேன் 250 கிராம் சேர்த்துக் காய்ச்சி, பாகுபதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தை_3_5 மில்லியளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால், நல்ல பசி உண்டாகும். இரைப் பையின் தீய விளைவுகள் நீங்கி விடும். நெஞ்சுச் சளி நீங்கி விடும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து தாதுபலத்தை ஏற்படுத்தும். தாம்பத்ய உறவு மேம்படும். புதினா இலைச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, தேன் சமமாகக் கலந்து, 30 மில்லியளவு ஆகாரத்துக்கு முன், தினம் மூன்றுவேளை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, கோடைகாலத்தில் ஏற்படும் புளிச்ச ஏப்பம், வயிற்றுப் போக்கு, கர்ப்ப கால மசக்கை வாந்தி இவைகள் நீங்கும். குடலில் தங்கியுள்ள நூல் புழுக்கள் மடிந்து விடும். புதினா இலைச்சாறும், கேரட் கிழங்குச் சாறும் சமமாகச் சேர்த்து கலந்து சாப்பிட்டால், நுரையீரலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி விடும். புதினா இலைச்சாற்றைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் சரளமாகப் பேசவும் பாடவும் முடியும். புதினா இலைச் சர்பத்து : புதினா இலைச்சாறு 120 மில்லி, இஞ்சிச் சாறு 120 மில்லி, எலுமிச்சம் பழச் சாறு 120 மில்லி, வினிகர் 120 மில்லி, வெல்லம் 500 கிராம். இலைகளை ஒன்றாகக் சேர்த்து ஒரு பாத்திரத்தில் விட்டு சர்பத்து காய்ச்சி தேன் பதம் வரும்போது எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம், தினம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சில தினங்களில், வாந்தி, குமட்டல், அஜீரணம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் முதலிய பிணிகள் நீங்கும். புதினா சர்பத்து : புதினா இலைச்சாறு 120 மில்லி எடுத்து வினிகர் 60 மில்லி சேர்த்து, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சர்பத்து பதம் வரும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு ஒரு தேக்கரண்டி தினம் மூன்று வேளை சாப்பிட்டால் அனைத்து வகையான வாந்தியும் நின்று விடும். பல் நோய்கள் நீங்க... புதினா இலையைக் காய வைத்து பொடி செய்து பயன்படுத்தும் பல்பொடியில் பத்துப் பங்குக்கு ஒரு பங்கு வீதம் கலந்து பல்துலக்கி வந்தால் பற்கள் உறுதியடையும் புதினாக் கீரையை உலர்த்திப் பொடி செய்து பொடிக்கு கால்பாகம் உப்புச் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பூச்சிகள் அழிந்துவிடும். பல் ஈறுகளின் நோய் குணமடையும். உடலின் உள் உறுப்புக்கள் சீராக இயங்கிட புதினாத்துவையலை வாரத்தில் ஐந்து தினங்களுக்குக் குறையாமல் உணவுடன் அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். புதினா ஜூஸ் தேவையான பொருட்கள்: புதினா இலை-1 கட்டு, தண்ணீர்-1 டம்ளர், சர்க்கரை-1 கப், இஞ்சி - கொஞ்சூண்டு, எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன், உப்பு-2 சிட்டிகை. செய்முறை: புதினா இலைகளை உதிர்த்து வெயிலில் நிழலான இடத்தில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் ரெடியான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறு மாதங்களுக்கு இந்த எஸன்ஸ் கெட்டுப் போகாமல் இருக்க பொட்டாசியம் பை ஸல்ஃபேட் இரண்டு சிட்டிகை கலக்கவும். ஒரு டீஸ்பூன் எஸன்ஸில் இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு ஜூஸாக குடிக்கலாம். வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். புதினா புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலுமிச்சை சாறு சேர்த்திருப்பது பசியின்மையையும் போக்கும். வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும். புதினா கீரையை சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள பூச்சிகிள் எல்லாம் போகும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்கப் புதினாக் குடிநீர் குடித்து வந்தால் குறையும் புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது . புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும். இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

Related

சீறுநீரகம் காக்கும் சிறுநெருஞ்சில்...மூலிகைகள் கீரைகள்,

நெருஞ்சிலின் சமூலம் (இலை, கொடி, காய், பூ விதை) அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.மருத்துவ பயன்கள்கண் நோய் பாதிப்பு நீங்க:நெருஞ்சில் சமூலம் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் அருகம்புல் ஒரு கைப்பிடி சேர்த...

கோடை வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய்: உடலை குளிர வைக்கும்--மருத்துவ டிப்ஸ்,

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீ...

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?---மருத்துவ டிப்ஸ்,

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.2. சமஅளவு வெங...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 7:05:59 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,329

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item