சமையல் குறிப்புகள்! கொள்ளுப்பொடி

கொள்ளுப் பொடி மனிதர்களைப் போலவே நாலுகால் உயிரினங்களில் சில கொழு கொழுவென்று பருக்கக் கூடும். ஆனால் குதிரைகளில் தொப்பையும் தொந்தியுமானவற்றை...

கொள்ளுப் பொடி

மனிதர்களைப் போலவே நாலுகால் உயிரினங்களில் சில கொழு கொழுவென்று பருக்கக் கூடும். ஆனால் குதிரைகளில் தொப்பையும் தொந்தியுமானவற்றை நாம் பார்த்ததுண்டா? சற்றே பூசினாற்போன்ற சதைபிடிப்புடனும், பளபளப்புடனும் இருக்கும் குதிரைகளைப் பார்க்கலாமே தவிர, குண்டுக் குதிரைகளைப் பார்ப்பது அரிதுதான். ஏன்? அறவே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். குதிரைகளின் இந்தக் கட்டுக் கோப்பான உடலமைப்புக்கு என்ன காரணம்? வேறென்ன? கொள்ளுதான்!

குதிரைகள் சாப்பிடும் அந்தக் கொள்ளை மனிதர்களும் சாப்பிட்டால் “குதிரைத் திறன்” அவர்களிடமும் அதிகரிக்கும் என்பதோடு, உடம்பில் ஊளைச் சதை போடாமல் அது இறுக்கமாகவும் வலிமையாகவும் இருக்கும். முக்கியமாய் நம் கால்கள் வலுவுள்ளவையாக இருக்கும். குதிரை களைப்பே யடையாமல் நெடுந்தொலைவு ஓட இயல்வது கொள்ளால்தான்! எனவே, கொள்ளால் நாமும் பயன் அடையலாமே! கொழுத்தவனுக்குக் கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு என்பது நமது முது மொழியாகும். அதாவது கொழுத்தவன் கொள்ளு உண்ணவேண்டும். உடம்பு இறுகும். சதைப்பற்று அற்று இளைத்திருப்பவன் சதை போட விரும்பினால் எள்ளை உண்ண வேண்டுமாம்!

கொள்ளுப்பொடிக்குத் தேவையானவை:

கொள்ளு . . . 200 கிராம்

துவரம்பருப்பு . . . 200 கிராம்

மிளகு ஒன்றரை மேசைக் கரண்டி

மிளகாய் வற்றல் . . . 4 அல்லது 5

உப்பு ஒன்றரை தேக்கரண்டி

(அல்லது தேவைப்படி)

கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி இலைகள்

பெருங்காயப் பொடி ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் 1 மேசைக்கரண்டி

முதலில், கொள்ளு, துவரம்பருப்பு ஆகியவற்றைத் தனித் தனியாக எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறும் இரும்புக் கடாயில் வாசம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு, மிளகை - அது படபட வென்று பொரியும் வரை - வறுத்து எடுக்கவும். பிறகு மிளகாய் வற்றலையும் அவ்வாறே அதன் ஈரப்பசை போய் முறு முறு வென்று ஆகும் வரை வறுக்கவும். உலர்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் அப்படியே பொடிக்கான பொருள்களோடு சேர்த்துத் திரிக்கலாம். பச்சைக் கறிவேப்பிலையாக இருந்தால், இலைகளை ஆய்ந்து இரும்புக் கடாயில் அவற்றின் ஈர்ப்பசை நீங்கும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும். சீரகத்தையும் பெருங்காயப் பொடியையும் ஒன்றாக இலேசாய் இதே போன்று வெறும் கடாயில் வறுக்கவும். பிறகு, மேலே சொல்லப்பட்டுள்ளா எல்லாப் பொருள்களையும் ஒன்றாய்க் கலந்து மின் அம்மியில் திரிக்கவும். ரொம்பவும் மையாகப் பொடிக்காமல் சற்றே கரகரப்பாகப் பொடித்தால் வாய்க்குச் சுவையாக இருக்கும்.

இந்தப் பொடியைச் சாதத்தில் தேவைப்படும் அளவுக்குக் கலந்து நெய் அல்லது நல்ல எண்ணெய் ஊற்றிக்கொண்டு பிசைந்து சாப்பிடலாம். சாதம் சுடச் சுட இருந்தால் சுவை கூடும். நெய்யானால் உருக்கியதை வார்த்துக்கொள்ளுவது நல்லது.

ஊளைச் சதைப் பருமனாலும், அதன் விளைவான முட்டி வலியாலும் அவதிப் படுகிறவர்களுக்கு இது ஓர் அருமருந்தாகும்.


Related

பயத்தம் பருப்பு தோசை -- சமையல் குறிப்பு

பயத்தம் பருப்பு தோசை வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்...

கீரை இட்லி -- சமையல் குறிப்பு

கீரை இட்லி ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை... என்ன தேவை? இட்லி மாவு - 2 கப் இளம் முருங்கைக் கீரை - ஒரு கப் பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் உப்பு...

உசிலி உப்புமா---சமையல் குறிப்பு

உசிலி உப்புமா தேவையான பொருட்கள்: 1. பயத்தம் பருப்பு - 50 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் துவரம் பருப்பு - 50 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் 2. மிளகாய் வற்றல் - 7 பச்சை மிளகாய் ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 7:19:41 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,329

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item