சமையல் குறிப்புகள்-வெனிலா கேக் ஸ்பெஷல்!
தேவையானவை: மைதாமாவு - 2 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - அரை கப்,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4641.html
தேவையானவை: மைதாமாவு - 2 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - அரை கப், மில்க்மெய்ட் - கால் கப், பால் - அரை கப், வெண்ணெய் - அரை கப், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், சர்க்கரை - இரண்டு டீஸ்பூன்,
செய்முறை: மைதாமாவு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். பிறகு பொடித்த சர்க்கரை, வெண்ணெய் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். அதில் மில்க்மெய்டை போட்டு ஒரே பக்கமாகக் கலக்கவும். இரண்டு டீஸ்பூன் சர்க்கரையை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வைத்து உருக்கவும். இதை வெண்ணெய் கலவையில் சேர்த்து, வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். இதில் சலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து, பாலை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
இப்போது ஒரு அலுமினிய பாத்திரத்தில் வெண்ணெயை தடவி, அதில் மைதாமாவைத் தூவி, கலந்து வைத்துள்ள கலவையை அதில் கொட்டவும். குக்கரின் அடியில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்டாண்ட் (அ) வடிதட்டியை கவிழ்த்து வைத்து, அதன் மேல் இந்தக் கலவை பாத்திரத்தை வைத்து, அதிக தீயில் அரை மணி நேரம் வைக்கவும். பிறகு, குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து, ஆறியதும் எடுத்து விரும்பியபடி அலங்கரித்துக் கொள்ளலாம்.
வெனிலா கேக்: முட்டை சேர்த்து கேக் செய்ய விரும்புபவர்கள் ‘மில்க்மெய்ட்’க்கு பதில் முட்டை சேர்த்துச் செய்யலாம். அப்போது சர்க்கரையின் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும்.
Post a Comment