சமையல் குறிப்புகள்-முந்திரி-பாதாம் ரோல் ஸ்பெஷல்!
தேவையானவை: முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப், பாதாம் - அரை கப், சர்க்கரைத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், பச்சை கலர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3452.html
தேவையானவை: முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப், பாதாம் - அரை கப், சர்க்கரைத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், பச்சை கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை: முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸி-யில் பொடிக்கவும். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் போட்டு, அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும். வெறும் கடாயில் பாதாம்பருப்பை வறுத்து பொடித்து, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும். ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, அப்படியே சாப்பிடவும். இந்த முந்திரி - பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
முந்திரி-பாதாம் ரோல்: பாதாமுடன் வால்நட், பிஸ்தாவையும் பொடித்துத் தூவினால் இன்னும் சுவையாக இருக்கும்.
Post a Comment