ஆரோக்கிய சமையல்! பரங்கிக்காய் சூப்
தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு துண்டு, வெங்காயம் - 1, தக்காளி - 1, பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பூண்டு ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4398.html
தேவையானவை: பரங்கிக்காய் - ஒரு துண்டு, வெங்காயம் - 1, தக்காளி - 1, பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 2 பல், எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: பரங்கிக்காயின் தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, பூண்டு, தக்காளி, வெங்காயம், பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும். 10 நிமிடம் வதங்கியதும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சூப்பை மீண்டும் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி, பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
பரங்கிக்காய் சூப்: பரங்கிக்காய், வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்தது. வழக்கமாக கூட்டு வைத்து சாப்பிடுவதை விட, இப்படி சூப் வைத்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும். உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைத்து, வயிற்றை நிறைவாக்கும் இந்த சூப்.
Post a Comment