ஆரோக்கிய சமையல்! தானிய காய்கறி சாம்பார்
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், ஊற வைத்த தானிய கலவை - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, நறுக்கிய காய்கறி கலவை - ஒரு கப், சாம்பார்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2044.html
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், ஊற வைத்த தானிய கலவை - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, நறுக்கிய காய்கறி கலவை - ஒரு கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தானிய காய்கறி சாம்பார்: இந்த சாம்பாரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. தானிய வகைகளை தோலுடன் சேர்ப்பதால் நார்ச்சத்தும் கிடைத்து விடும். எண்ணெய் அதிகம் சேர்க்காத அருமையான சாம்பார் இது.
--------------------------------------------------------------------------------
Post a Comment