சமையல் குறிப்புகள்! பலாப்பழ பாயசம்
ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்த பலாப்பழ சதை - 2 கப், வெல்லம் - 4 கப், பால் - ஒரு லிட்டர், கெட்டியான தேங்காய் பால் (முதல் பால்) - ஒரு க...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7468.html
ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்த பலாப்பழ சதை - 2 கப், வெல்லம் - 4 கப், பால் - ஒரு லிட்டர், கெட்டியான தேங்காய் பால் (முதல் பால்) - ஒரு கப், பொடித்த ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: பாலை நன்றாகக் கொதிக்க வைக்கவும். வெல்லத்தை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி பிசுக்குப் பதத்தில் பாகு எடுக்கவும். இதில் மசித்த பலாப்பழத்தை போட்டுக் கிளறவும். இந்தக் கலவையை ரெடியாக உள்ள பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பின் கடைசியாகத் தேங்காய் பால் ஊற்றி, ஏலக்காய் பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைத்துப் பரிமாறவும்.
பலாப்பழத்தின் சுபாவம் சூடு. தவிர இது ஜீரணமாவது சற்று கடினம் என்பதால் அளவாக தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. பலாப்பழம் பசியை மந்தப்படுத்துவதுடன் வாயுவை உண்டாக்கிவிடும். அதனால் உடல்நலம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடக் கூடாது!
முக்கனிகளில் ஒன்றான பலாவில் வைட்டமின் ஏ, பி1, பி2, புரோட்டீன், கொழுப்பு ஆகிய சத்துக்கள் உண்டு.
பலன்கள்: வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. பலாச் சுளைகளை சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் உறுதி பெறும்.
உடல் மற்றும் தலையில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை கொடுக்கும் பழம் இது. பலாக்கொட்டைகளை சுட்டும், குழம்பில் வேக வைத்தும் சாப்பிடலாம். இதிலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
டயபடீஸ் நோயாளிகள் இந்தப்பழத்தை சாப்பிடவே கூடாது.
அழகு பலன்கள்: பலாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாய் மாற ஆரம்பிக்கும்.
Post a Comment