சமையல் குறிப்புகள்! முள்ளுத்தேன்குழல் (முறுக்கு)
முள்ளுத்தேன்குழல் (முறுக்கு) மாவு தயாரிக்கும் விதம் தேவையான சாமான்கள் = அரிசி மாவு 4 கப், கடலைப்பருப்பு 1 கப், பயத்தம்பருப்பு 1 கப், கடலைப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8517.html
முள்ளுத்தேன்குழல் (முறுக்கு) மாவு தயாரிக்கும் விதம்
தேவையான சாமான்கள் = அரிசி மாவு 4 கப், கடலைப்பருப்பு 1 கப், பயத்தம்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் கலந்து தண்ணீரில் நனைக்கவும், தண்ணீர் வடிந்தவுடன் நிழலில் காய வைக்கவும்.
செய்முறை = பருப்பு காய்ந்தவுடன், வாசனை வரும் பக்குவத்தில் வறுத்து, மிகவும் சன்னமாகப்பொடி பண்ணவும், தேன்குழல் செய்யும்போது அரிசி மாவு, பருப்பு மாவு, வெண்ணெய் அல்லது நெய், எள்ளு, பெருங்காயம், உப்பு முதலியவற்றைக்கலந்து திட்டமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக மாவு கலந்து, தேன்குழல் தயாரிக்கவும்.
சாதா தேன்குழல் தயாரிக்க தேவையான சாமான்கள்.
பச்சை அரிசி 4 கப், உளுத்தம்பருப்பு 2 கப்,
செய்முறை = உளுத்தம்பருப்பை தண்ணீரில் நனைத்து சற்று நேரம் ஊறியவுடன் களைந்து தண்ணீரை வடிய வைக்கவும், தண்ணீர் வடிந்தவுடன் நிழலில் காய வைக்கவும் (உலர்த்தவும்). வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிகவும் சன்னமாக மாவு அரைக்கவும், அரைத்த மாவை சலிக்கவும், வடாம் செய்வதற்கு குறிப்பிடப்பட்டிற்கும் அளவின்படி உபயோகப்படுத்தவும். மேற் சொன்ன முறையில் அரிசியையும் களைந்து, நிழலில் உலர்த்தி, சற்று வறுத்து மாவு அரைத்து உளுந்து மாவுடன் கலந்து உப்பு, எண்ணெய், சீரகம், பெருங்காயத்தண்ணீர் முதலியவற்றை சேர்த்து பிசைந்து தேன்குழல் தயாரிக்கவும்.
Post a Comment