அசத்தல் சமையல்! சுமங்கலிப் பொங்கல்
தேவையானவை : பச்சரிசி & 2 கப், துவரம்பருப்பு & அரை கப், மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், முந்திரி & 10, தேங்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1598.html
தேவையானவை : பச்சரிசி & 2 கப், துவரம்பருப்பு & அரை கப், மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், முந்திரி & 10, தேங்காய் துண்டுகள் & சிறிது, நெய் & கால் கப், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் குக்கரில் வைத்து நன்றாகக் குழைய விடவும். வெந்ததும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும். நெய்யில் மிளகு, சீரகத்தை பொரித்துப் போடவும். முந்திரி, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்துப் போடவும். மீதியுள்ள நெய்யை பொங்கலின் மேல் ஊற்றவும்.
சுமங்கலிப் பொங்கல்: பயத்தம் பருப்பு பொங்கல் போலவே இதிலும் இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கலாம். இஞ்சி சேர்ப்பதால் பொங்கல் எளிதில் ஜீரண மாகும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment