அசத்தல் சமையல்! ஜவ்வரிசி அப்பம்
தேவையானவை : ஜவ்வரிசி & அரை கப், வெள்ளை ரவை & அரை கப், பால் & ஒரு கப், பச்சரிசி & அரை கப், புழுங்கலரிசி & அரை கப், வெல்ல...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8920.html
தேவையானவை : ஜவ்வரிசி & அரை கப், வெள்ளை ரவை & அரை கப், பால் & ஒரு கப், பச்சரிசி & அரை கப், புழுங்கலரிசி & அரை கப், வெல்லம் & ஒன்றரை கப், பொடித்த முந்திரி & ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் & சுட்டெடுக்க தேவையான அளவு, வாழைப் பழம் & 1.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். ஜவ்வரிசி, ரவை இரண்டையும் பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தை சிறிது நீர் விட்டு கரைத்து (லேசாக சூடுசெய்தால் கரைந்துவிடும்) வடிகட்டி, ஊறவைத்த ரவை & ஜவ்வரிசி கலவையில் கொட்டி அரைக்கவும். இதை, அரிசி கலவையில் கலந்து முந்திரியையும், ஏலக்காய்தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, வாழைப்பழத்தைச் சேர்க்கவும். வாழைப்பழம் சேர்க்காமலும் செய்யலாம். எண்ணெயைக் காயவைத்து, பெரிய ஸ்பூன் அல்லது சிறிய கரண்டியால் மாவை எடுத்து, காய்ந்த எண்ணெயில் விடவும். இருபுறமும் வேகவிட்டு எண்ணெயை வடித்து எடுக்கவும். ரவையை மட்டும் அரைத்து ஜவ்வரிசியை ஊறவைத்தும் அப்படியேயும் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி அப்பம் : அரிசியுடன் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்து செய்தால் அப்பம் மிகவும் மெத்தென்று இருக்கும்.
Post a Comment