சமையல் குறிப்புகள்! மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ் (குழந்தைகளுக்கு) தேவையானவை: பாசிப்பருப்பு & அரை கப், பொடியாக நறுக்கிய சுரைக்காய் & 2 கப், காரத்துக்கு ஏ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7139.html
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
(குழந்தைகளுக்கு)
தேவையானவை: பாசிப்பருப்பு & அரை கப், பொடியாக நறுக்கிய சுரைக்காய் & 2 கப், காரத்துக்கு ஏற்ப பச்சை மிளகாய் & 2 (அ) 3, சின்ன வெங்காயம் & 2, சீரகம் & அரை டீஸ்-பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவையான அளவு, மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, பால் & கால் கப்.
செய்முறை: பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பிரஷர் குக்கரில் காயுடன் சிறிது உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு பருப்பு, காய்களை சேர்த்து கொதிக்க விடவும். இறக்கி, பால் சேர்க்கவும். கையால் நன்றாகத் தேய்த்த சீரகத்-தையும், கிள்ளிய கறிவேப்பிலை யையும் கலந்து பரிமாறவும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல சத்தான சூப் இது. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு மிக்ஸியில் அரைத்ததை வடிகட்டாமல், அப்படியே சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்.
Post a Comment