சமையல் குறிப்புகள்! அதிரசம்
பச்சரிசி 1 கோப்பை வெல்லம் 1 கோப்பை ஏலக்காய் 4 அல்லது 5 வறுக்க எண்ணெய் அல்லது நெய் செய்முறை 1) பச்சரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக...
வெல்லம் 1 கோப்பை
ஏலக்காய் 4 அல்லது 5
வறுக்க எண்ணெய் அல்லது நெய்
செய்முறை
1) பச்சரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்
2) அதை பிழிந்து நிழலில் உலர்த்தவும்
3) சற்று காய்ந்ததும் இதனை பொடி செய்து கொள்ளவும். (மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளலாம்)
4) வெல்லத்தில் கால் கோப்பை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்
5) பாகு உருண்டைப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்
6) மாவில் ஏலக்காயைப் பொடி செய்து போட்டுக்கொள்ளவும்
7) இந்த மாவுடன் சிறிது சிறிதாக வெல்லப்பாகை ஊற்றி பிசைந்து உருண்டை பண்ணும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும்
8) எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து மெலிதாகத் தட்டி எண்ணெய் அல்லது நெய்யில் பொறித்தெடுக்கவும்
**
பாகு உருண்டைப் பதம்
தட்டில் சிறிது தண்ணீரை வைத்துக்கொள்ளவும்
பாகை ஒரு தேக்கரண்டியில் எடுத்து நாலைந்து சொட்டு ஊற்றவும். தண்ணீருக்குள் இருக்கும் பாகை கையில் எடுத்து உருட்டினால் உருண்டையாக வரவேண்டும்
Post a Comment