சமையல் குறிப்புகள்! நெய் பாயசம்
தேவையான பொருட்கள்: கழுவி சுத்தம் செய்யப்பட்ட பச்சரிசி-1 கப், வெல்லம்-500 கிராம், முந்திரிப் பருப்பு-10 கிராம், திராட்சை-சிறிதளவு, ஏலக்காய்-6...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3485.html
தேவையான பொருட்கள்: கழுவி சுத்தம் செய்யப்பட்ட பச்சரிசி-1 கப், வெல்லம்-500 கிராம், முந்திரிப் பருப்பு-10 கிராம், திராட்சை-சிறிதளவு, ஏலக்காய்-6, நெய்-4 மேஜைக்கரண்டி, பால்-1 கப், தண்ணீர்-2 கப்.
செய்முறை: குக்கரில் நெய்யை உருக்கி அதில் அரிசியைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். இத்துடன் பால், தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும். பிறகு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்தும், இதையும் அரிசியுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். அப்போதே நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். தண்ணீர் வற்றி பாயசம் கெட்டியானதும் கீழே இறக்கி வைத்து ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் கம கம நெய் பாயசம் ரெடி.
Post a Comment