சமையல் குறிப்புகள்! ஸ்பெஷல் பிரியாணி

தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கி...

தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கிராம் * இஞ்சி- 50 கிராம் * பூண்டு- 50 கிராம் * கசகசா- ஒரு தேக்கரண்டி * தயிர்- ஒரு கப் * முந்திரி பருப்பு-20 கிராம் * உலர் திராட்சை-20 கிராம் * மல்லி இலை- ஒரு கட்டு * புதினா இலை- அரைகட்டு * எலுமிச்சம் பழம்- ஒன்று * பன்னீர்- 2 மேஜைக்கரண்டி * மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு * கறிமசால் தூள்-3 தேக்கரண்டி * தக்காளி- 100 கிராம். * உப்பு- தேவைக்கு செய்முறை: + கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். + பெ.வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். + முந்திரி பருப்பை இருதுண்டுகளாக நறுக்குங்கள். + ஒவ்வொரு தக்காளியையும் நான்காக நறுக்குங்கள். + இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் போன்றவைகளை இடித்துவைக்கவும். கசகசாவை மாவு போல் அரைக்கவும். + மல்லி இலை, புதினா போன்றவைகளை நறுக்கிவைக்கவும். + எலுமிச்சை பழத்தை பிழியவும். + கெட்டியான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றுங்கள். சூடாகும் போது நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தில் பாதி அளவைக் கொட்டி கிளறுங்கள். வெங்காயத்தின் நிறம் மாறிவரும்போது அரைத்து வைத்திருக்கும் மசாலை சிறிது சிறிதாகக் கொட்டி கிளறுங்கள். நன்றாக வாசனை வரும்போது கோழித்துண்டுகளைச் சேர்த்து கிளறுங்கள். அதில் தயிர், கசகசா, தக்காளி, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைத்து வேகவிடுங்கள். லேசாக தீயை எரியவிட்டால் போதும். + கோழி வெந்து, சாறு வற்றி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். + அரிசியை கழுவி தண்ணீர் வடிய வையுங்கள். + மீதம் இருக்கும் நெய்யை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். சூடானதும் மீதம் இருக்கும் வெங்காயத்தைக் கொட்டி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். முந்திரிபருப்பையும், உலர் திராட்சையையும் கொட்டி கிளறி எடுத்து விடுங்கள். + அதே எண்ணையில் அரிசியைக் கொட்டி தொடர்ந்து கிளறி லேசாக வெந்து வரும் நிலை ஏற்படும் போது தேவைக்கு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பும் சேர்த்து மூடிவைத்து வேகவிடுங்கள். சோறு வெந்து, தண்ணீர் வற்றியதும் இறக்கி விடுங்கள். + வெந்த இறைச்சியில் சிறிதளவு கறிமசால் தூள் சிதறுங்கள். அதற்கு மேல் மூன்றில் ஒரு பகுதி சாதத்தைக் கொட்டுங்கள். பன்னீரில் சிறிதளவு மஞ்சள் கலர்தூளை கலக்கி, அதற்கு மேல் தெளியுங்கள். அதற்கு மேல் சிறிதளவு கறிமசால் தூள், பொரித்த வெங்காயம், முந்திரி-உலர் திராட்சை போன்றவைகளை சேர்க்க வேண்டும். மீதம் இருக்கும் சாதத்தையும் ஏற்கனவே உள்ள முறைப்படி வைத்துவிட்டு, கனமான மூடியால் மூடுங்கள். அதன் மீது தீக்கனல் போட்டு பத்து நிமிடம் வையுங்கள். சூடான ஓவனில் வைத்தாலும் போதும். + பிரியாணியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதற்கு மேல் நெய்யில் வறுத்த வெங்காயம் வைத்து அலங்கரித்து பரிமாற வேண்டும்.

Related

சமையல் குறிப்புகள் 7346305328527504224

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item