கற்றாழையின்( Alove Veera) மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்:

தாவரவியல் பெயர் : Alove Veera வேறு பெயர்கள்: கற்றாழை, கத்தாளை, குமாரி, கன்னி. வேறு மொழிப் பெயர்கள்: ஆங்கிலம்: Indian Aloes, தெலுங்கு: கலபந்த...

தாவரவியல் பெயர் : Alove Veera வேறு பெயர்கள்: கற்றாழை, கத்தாளை, குமாரி, கன்னி. வேறு மொழிப் பெயர்கள்: ஆங்கிலம்: Indian Aloes, தெலுங்கு: கலபந்த மலையாளம்: கட்டுவாளா, கன்னடம்: கதளிகிட சமஸ்கிருதம்: குமாரி, இந்தி: Ghikavar இது இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும் மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப்படுத்தப்படுகின்றது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: 1. கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து தொங்கவிட அதில் நீர் வடியும். இதை கண்ணில் விட, கண் நோய், கண் சிவப்பு, தீரும். 2. இதன் சாறு வெப்பத்தைத் தணிக்கும். 3. இந்தச் சாற்றுடன், வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகுத் தூள் சேர்த்துண்ண நீர்சுருக்கு, உடலரிப்பு நீங்கும். 4. கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடியாகச் செய்து உண்ண, இளமையாக நூறாண்டு வாழலாம். 5. மலச்சிக்கல் தீர: இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காய வைத்து பொடி செய்து, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்ணீரில் கலந்து பருக வேண்டும். 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். 6. வெட்டுக்காயங்கள் குணமாக: இலையைக் கீறி சதைப்பகுதியை வெளியே தெரியுமாறு செய்து,அதைக் காயத்தின் மீது வைத்துக் கட்டுப்போட வேண்டும்.காயம் ஆறும் வரை தினம் இருமுறை செய்யவும். 7. வெண்படை குணமாக: சோற்றை எடுத்து புதிதாக தினமும் மேலே பூசிவர வெண்படை குணமாகும். 8. மூலநோய் தீர: இலைத்தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப் பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவு சாப்பிட்டு வர வேண்டும். தினம் காலை மட்டும் 1 வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். 9. மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குறைய: சோற்றுக்கற்றாழை சாறு 6 தேக்கரண்டியுடன் 1 சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 1/2 கிராம் அளவிற்கு தினமும் 2 வேளை, சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். 10. இதன் சாறு எடுத்து, இதே அளவு நல்லெண்ணெய் எடுத்து கலந்து காய்ச்சி தலையில் தடவி வர தூக்கம் உண்டாகும். முடி வளரும். 11. சிற்றாமணக்கு எண்ணெய் 340g, கற்றாழைச் சோறு 85g, ஊற வைத்து அரைத்த வெந்தயம் 81/2g, சிறுக அரிந்த வெள்ளை வெங்காயம்-1, சேர்த்து காய்ச்சிய பதத்தில் இறக்கி வடிகட்டி, அதை 1 வேளை மட்டும் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும்.

Related

உணவே மருந்து - வெந்தயம் -வெந்தய களி:- வெந்தய சாலட்- வெந்தய பொங்கல்:

உணவே மருந்து - வெந்தயம் மூலிகைகள் நோய்களை களைவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளில் ஒன்றான வெந்தயம் பல சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அடக்...

கீரைகளின் மகத்துவம்!

கீரையின் மகத்துவம் கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம். அகத்திக்கீரை: அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்...

மூலிகைகள் கீரைகள்! பொன்னாங்கண்ணிக் கீரை

சாதாரணமாக பொன்னாங்கண்ணி யின் காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும் எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக் கள், கார்போ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 7:06:8 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,329

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item