சமையல் குறிப்புகள்! பைனாப்பிள் சட்னி
பைனாப்பிள் சட்னி தேவையான பொருட்கள்: நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், பேரீச்சம் பழம் - 8, மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3077.html
பைனாப்பிள் சட்னி
தேவையான பொருட்கள்: நறுக்கிய பைனாப்பிள் - ஒரு கப், பேரீச்சம் பழம் - 8, மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், உலர் திராட்சை - 3 டீஸ்பூன், வினிகர் - 1/2 கப், சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பைனாப்பிள், பேரீச்சை இரண்டையும் ஒரு கப் தண்ணிரில் மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் வற்றியவுடன் சர்க்கரை, மிளகாய் தூள், திராட்சை, ஏலக்காய், உப்பு, விணீகர் எல்லாவற்றையும் கலந்து சுருள்பதத்துக்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருந்தால் பைனாப்பிள் சட்னி ரெடி!
Post a Comment