மூலிகைகள் கீரைகள்! துத்திக்கீரையின் மகத்துவம்!

துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத...

துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக் கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக் கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் மேற்கண்ட பிணிகளில் இருந்து நிவாரணம் அடையலாம். துத்திக் கீரையை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் முழுமையான நிவாரணம் பெறலாம். துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கஷாயம் தயாரித்து, இதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும். துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவு சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு தணியும். துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூலக் கட்டிகள் உடைந்து மூல ரணங்கள் ஆறிவிடும். மூல நோய் அகன்று விடும். பால்துத்தியை தண்ணீர் விடாமல் அரைத்து வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறிவிடும். பால்துத்தியின் அடையாளம் காண பால்துத்திக்காயின் மேல் தண்ணீர் தெளித்தால் வெடிக்கும். துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும். உடம்பில் எந்தப் பாகத்திலாவது வீக்கம், வலி இருந்தால் இதே மருந்தைப் போட்டுவர குணம் ஏற்படும். துத்தி இலையை இடித்துச் சாறு தயாரித்து இதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும். துத்தி இலை அல்லது துத்தி வேரை 35 கிராம் எடுத்து 250 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும். துத்திவேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களுக்குத் தடவினால் முகப்பரு நீங்கி விடும். துத்தி விதையை 10 கிராம் அளவில் எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். தொழுநோயின் ஆரம்பத்தில் இப்படிச் சாப்பிட்டால், மேற்கொண்டு நோய்முற்றாமல் தடுத்துவிடும். துத்தியின் மூலம் சேகரித்து, 100 கிராம் அளவில் எடுத்து 300 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி தினசரி சாப்பிட்டு வந்தால், காமாலை நோய் குணமாகும் நீர்ச் சுருக்கு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும். தொண்டை தொடர்பான நோய்கள் இருக்காது. சொறி, சிரங்கு, பத்து, படை, அரிப்பு நீங்கி விடும். துத்திப் பூவை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும். துத்தி இலையை நிழற்பாடமாகக் காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு, இந்தப் பொடியைக் காலை மாலையாக ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம் மூலப் புண்கள், மூலக் கடுப்பு முதலிய பிணிகள் முற்றிலுமாக அகலும். நோய் தீர சில தினங்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதே சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், பல பிணிகளில் இருந்து முன் தடுப்பாகச் செய்து கொள்ளலாம். மூன்று தினங்களும் காலை, மாலை சாப்பிட்டால் போதுமானது. துத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டிப் பொடியில் பால், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்த வாந்தி நின்று விடும். உடல் வெப்பம் நீங்கும். தேகம் குளிர்ச்சியடைந்து விடும். நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடல் போஷாக்கு அடைந்து ஆரோக்கியமான, திடகாத்திரமான உடல் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். துத்தி விதையைப் பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும். இரத்த சுத்தி ஏற்படும். இரத்த விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அதிகரித்து போக சக்தியை மேம்படுத்தும். துத்தி இலை, துரா இலை, வெங்காயம் இம்மூன்றையும், சம அளவில் எடுத்து, சிறு சிறு பொடியாக அரிந்து சித்தாமணக்கு எண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு விட்டு, இதே மருந்தை ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் ஆசனக் கடுப்பு நீங்கும். துத்தி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் தயாரித்து எருமைத் தயிரில் குழப்பி 3_5 நாள் சாப்பிட்டால், சிறு நீரில் இரத்தம் கலந்து வந்தால் உடனே நிற்கும். இதற்குக் காரணமான வெட்டை நோய் தீர்ந்து விடும். துத்தி விதையைக் காலையில் 10 கிராம் அளவில் ஊறவைக்க வேண்டும். இதை மாலையில் சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதே போல் மாலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் சாப்பிட்டால் இரத்தபேதி, வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை ரணங்கள், வயிற்றில் தொடர்ந்து ஏற்படும் எரிச்சல் முதலிய நோய்கள் தீரும். துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து கற்கண்டு சேர்த்துச் சில தினங்கள் சாப்பிட்டால், சூட்டினால் ஏற்பட்ட இருமல் தீரும். வட்டத் துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து இதில் நெய் சிறிதளவு சேர்த்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் மூலமுளை கரைந்து விழுந்து விடும். துத்தி இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நெய் சேர்த்து 30 மில்லி அளவு சாப்பிட்டால், கடுமையான ஜலதோஷம் குணமாகும். தாதுபுஷ்டி லேகியம் பெரும் துத்தியின் இலைச்சாறு 500 மில்லி, பால் ஒரு லிட்டர், பனங்கற்கண்டு 500 கிராம் இவைகளை ஒன்று சேர்த்து இளந்தீயாக எரித்து மெழுகுபதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். லேகிய பதத்தில் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை காலை, மாலை ஒரு நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால், தேகம் வலுவடையும், தாது புஷ்டி உண்டாகும். எலும்புமுறிவிற்குப் பல அனுபவ முறையில் மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எலும்பில் முறிவு ஏற்பட்டவுடன் எலும்புகளைச் சரியாக இணைத்து வைத்து, முறிவு ஏற்பட்ட இடத்தில் துத்திக் கீரையை அரைத்துக் கனமாகப் பூசி இதன் மேல் துணியால் கட்டி, பிறகு இதை அசையாமல் மூங்கில் சிம்புகளை முறையாக வைத்துக் கட்டி அசையாமல் வைத்திருந்தால், சில தினங்களில் உடைந்த எலும்பு கூடிவிடும். சமையலுக்குப் பயன்படும் கீரைகளில் ஒன்றாக துத்திக் கீரை திகழ்கிறது. இந்தக் கீரையை பருப்பு சேர்த்து கடைந்தும், பொரியலாகவும் பயன்படுத்தலாம். துத்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய அளவில் உம்ளன. இக்கீரையை பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு கட்டுப்படும். மலத்தை இளக்கும். முறிந்த எலும்பை ஒட்ட வைக்கும் திறனும் இந்தக் கீரைக்கு உண்டு. குடல் புழுக்கம், குடல் புண், நீர்ச்சுருக்கு, சொறி சிரங்கு, காமாலை போன்ற நோய்களை குணப்படுத்து வதிலும் இக்கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. துத்திக் கீரையின் சாறை எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணை கலந்து சுண்டக் காய்ச்சிச் குழந்தைகளுக்கு கொடுத்தால் கரப்பான் நோய் குணமாகும். அதேபோல் இந்த இலையை அரைத்து அதை கோடை காலத்தில் ஏற்படும் வேனற் கட்டிகம் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து அதனும் இருக்கும் சீழ் வெளியேறும். அதேபோல் இக்கீரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடித் துகளும் தோல் தொடர்பான நோய்களைக் போக்கும். துத்தி இலையை கசாயம் செய்து கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கம் குணமடையும். அதேபோல் அந்தக் கசாயத்துடன் பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு போன்றவையும் குணமாகும். துத்திக் கீரை காட்டுச் செடியாக வளரக்கூடியது. இதன் இலைகம் அகன்றும், இலைக் காம்புகம் நீளமாகவும் இருக்கும். இலைக் காம்பின் இடுக்கில் மஞ்சம் நிறத்தில் பூ பூக்கும்.

Related

முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை!

 முத்தான பலன்கள் தரும் முருங்கைக் கீரை! தமிழர் உணவில் தொன்றுதொட்டு இடம்பெறும் முக்கியமான கீரைகளுள் முருங்கைக் கீரையும் ஒன்று. முருங்கை மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. ...

சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி !

சைனஸ்க்கு 'பை'சொல்லும் அகத்தி ! தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தியில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Jan 21, 2025 7:15:10 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,329

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item