தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ அரிசி - 1/2 கிலோ பப்பாளி காய் - 200 கிராம் இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (விழுது) தயிர் - 1/2 குழிக்கரண்ட...

தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
பப்பாளி காய் - 200 கிராம்
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (விழுது)
தயிர் - 1/2 குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து தயிரில் ஊற வைக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கீறிய மிளகாய், உப்பு இவை சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
* பிறகு மட்டனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேகவிடவும்.
* மட்டன் முக்கால் பாகம் வெந்ததும், அரிசியைச் சேர்த்து ஒன்றரை மடங்கு நீர் சேர்க்கவும்.
* அரிசி ஒரு வேக்காடு வெந்ததும் பப்பாளிக் காயை அரைத்துச் சேர்க்கவும்.
*குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். மட்டன் நன்கு வெந்து சாதத்துடன் சேர்ந்தவுடன் கிளறி இறக்கவும்.
பிரியாணி என்றதும் ஒரு பிடிபிடித்து ருசித்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. கச்சி பிரியாணி தனி சுவை கொண்ட பிரியாணி வகையைச் சேர்ந்தது. இதில் சேர்க்கப்படும் பப்பாளியும், தயிரும் அதற்கு சிறப்பான சுவையை வழங்குகிறது. முருங்கைக் காய் உடலை முறுக்கேற்றும் சமாச்சாரம் என்றால் பெப்பர் (மிளகுத்தூள்) உடலை சீராக்கும் குணம் நிறைந்தது. இரண்டையும் சிக்கனுடன் சேர்த்து சமைத்தால் அதுவும் தனி சுவையே!
Post a Comment