தேவையானவை: ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், வெண்ணெய் (அ) நெய் - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - சிறிதளவு. இனிப்பு சேமியா செய்வதற்கு: சேமியா - அரை கப், ...

தேவையானவை: ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், வெண்ணெய் (அ) நெய் - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - சிறிதளவு.
இனிப்பு சேமியா செய்வதற்கு: சேமியா - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், மெல்லியதாக நறுக்கிய முந்திரி, பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் கோவா (இனிப்பு சேர்த்தது) - 50 கிராம், மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாதியளவு நெய்யை காயவைத்து அதில் முந்திரி, பாதாமை வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். தீயைக் குறைத்து மூடி போட்டு நன்றாக வேகவிடவும். சேமியா வெந்ததும் சர்க்கரை, மஞ்சள் கலர் சேர்த்துக் கிளறவும். முதலில் சற்று நீர்த்து பிறகு சேர்ந்து கொள்ளும். அப்போது, உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்தக் கலவையை ஒரு பிரெட் துண்டின் மேல் பரவினாற்போல் வைக்கவும். கார்ன்ஃப்ளாரை சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, அதில் சேமியா கலவை தடவிய பிரெட்டைப் போட்டு அதன் மேல் கார்ன்ஃப்ளார் கலவையை பரவினாற்போல் விடவும். இந்தப் பகுதி தோசைக்கல்லின் மேல் படுமாறு வைக்கவும். சுற்றிலும் சிறிதளவு நெய்யை விட்டு, பிறகு 5 நிமிடம் கழித்து மறுபுறம் திருப்பிப் போட்டு, தீயை நன்கு குறைத்து சற்று மொறுமொறுப்பானதும் எடுத்துப் பரிமாறவும்.
Post a Comment