தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - 1 இஞ்சி (விழுது) - 5 கிராம் பச்சைமிளகாய் (நறுக்கியது) - 10-12 கறிவே...

தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) - 1
இஞ்சி (விழுது) - 5 கிராம்
பச்சைமிளகாய் (நறுக்கியது) - 10-12
கறிவேப்பிலை - தேவைக்கு
தக்காளி (நீளவாக்கில் நறுக்கியது) - 1
தேங்காய் (துருவியது) - 1/2 மூடி
கார்ன்ப்ளோர் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - 50 மி.லி.
செய்முறை
15- 30 நிமிடத்திற்கு மீனை உப்பு போட்டு ஊற வைத்து, ஒன்றுக்கு பாதியாகவும், நுனி துண்டு உடையாமலும் ஜாக்கிரதையாக வறுக்கவும்.
எண்ணையில் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
துருவிய தேங்காயை சிறிது சூடான நீரில் போட்டு ஊறவைத்து பின்பு பிழிந்து பால் எடுத்து வைக்கவும்.
மீதி இருப்பதிலும் பால் எடுத்து அதை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளைப் போடவும்.
10 நிமிடங்கள் வேகவைக்கவும், பிறகு முதலில் எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றவும், தொடர்ந்து பாதி எலுமிச்சம் பழத்தில் எடுத்த சாறை ஊற்றவும். பிறகு பரிமாறலாம்.
தேங்காய் சேர்த்து செய்த குழம்பு மணக்கும். முந்திரி சுவையால் ஈர்க்கும். தேங்காய்ப் பாலெடுத்து மீனுடனும், முந்திரியை மட்டனுடனும் சேர்த்து செய்யும் குழம்பு மணமும், சுவையும் மிக்கது. மீன் மொய்லியும், மட்டன் முந்திரி வறுவலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
Post a Comment