தேவையான பொருள்கள் : பிரியாணி அரிசி - 250 கிராம், பீன்ஸ்+காரட்+பட்டாணி வெட்டியது - 100 கிராம், பெரிய வெங்காயம் வெட்டியது - 1, தக்காளி - 3, ...

தேவையான பொருள்கள் :
பிரியாணி அரிசி - 250 கிராம்,
பீன்ஸ்+காரட்+பட்டாணி வெட்டியது - 100 கிராம்,
பெரிய வெங்காயம் வெட்டியது - 1,
தக்காளி - 3,
புதினா+கொத்துமல்லி - சிறிது,
கரம் மசாலாத் தூள் - 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய்+பூண்டு+இஞ்சி அரைத்தது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன்,
முந்திரி பருப்பு - 5,
நெய் - 50 கிராம்,
தேங்காய்ப் பால் - 2 தம்ளர்,
உப்பு - தேவையானது.
கோப்தா செய்வதற்கு :
வெண்ணெய் - 100 கிராம்,
மைதா - 100 கிராம்,
சீஸ் துருவி - 100 கிராம்,
தண்ணீர் - 100 மிலி,
அரைக்கீரை+வல்லாரை+பொன்னாங் கன்னிக் கீரைகள் சுத்தம் செய்யப் பட்டவை - 1 கப், உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 100 மிலி தண்ணீர் ஊற்றி, அது கொதித்த வுடன், அதில் மைதா போட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டியானவுடன், கீரைகள், பச்சைமிளகாய், உப்பு, துருவிய சீஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
காப்பர் பாட்டம் குக்கர் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி தக்காளி போட்டு அதையும் வதக்கிப் பூண்டு + இஞ்சி + பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு வதக்கி கரம் மசாலா, மிளகாய்த் தூள் போட்டு அத்துடன் காய்கறிகளையும் போட்டு நன்கு கலந்து உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
பின் தேங்காய்ப் பால், தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதித்தவுடன் ஊறவைத்து, தண்ணீர் வடித்த அரிசி போட்டு நன்கு வேகவிடவும். தண்ணீர் குறைந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் மூடி வேகவிடவும்.
பின் திறந்து கொத்துமல்லி+புதினா, நெய்யில் வறுத்த முந்திரி, கிரீன் கோப்தா ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து விட்டுப் பரிமாறலாம். இதில் கீரை+ காய்கறி இருப்பதால் சீஸ் மணத்துடனும் அதிக சுவையுடனும் இருக்கும். இதில் எல்லாம் அரைத்துச் சேர்த்து இருப்பதால் சாதத்தில் இருந்து எதையும் எடுத்து வைக்காமல் சாப்பிட வசதியாக இருக்கும்.
குறிப்பு : வெந்தயக்கீரை, பசலை என நமக்குத் தேவையான கீரைகளைப் போட்டுக் கொள்ளலாம்.
Post a Comment