தேவையானவை: முழுக்கோழி --1 & பூண்டு --1 & இஞ்சி --50கிராம் & எலுமிச்சம் பழம் --1/2 மூடி & வெங்காயம் --1 & மிளகாய்த்தூள் ...

தேவையானவை:
முழுக்கோழி --1 & பூண்டு --1 & இஞ்சி --50கிராம் & எலுமிச்சம் பழம் --1/2 மூடி & வெங்காயம் --1 & மிளகாய்த்தூள் --3டாஸ்பூன் & மிளகுத்தூள் --2டாஸ்பூன் & கரம் மசாலாத்தூள் --1டாஸ்பூன் & சீரகத்தூள் --1டாஸ்பூன் & தந்தூரிக்கலர் --தேவையான அளவு & தயிர் --1கப் & உப்பு --தேவையான அளவு
செய்முறை:
முழுக்கோழியின் தோலை உரித்து, உள்ளிருக்கும் நுரையீரல், இதயம், ஈரல் மற்றும் வேண்டாத பகுதிகளை நீக்கி விட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கூரிய கத்தியைக் கொண்டு கோழியின் சதை பகுதிகளில் ஆழமாகக் கீறிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு இவைகளை மைப்போல் அரைத்து தயிரில் கலக்க வேண்டும். மேலும் தேவையான அளவு உப்புத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தந்தூரிக்கலர் எலுமிச்சம்பழச்சாறு இவைகளையும் சேர்த்து செம்மையாக கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தயிர் மசாலாவை கோழியின் உள்ளும், புறமும் நன்கு தடவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்த கோழியை போட்டு வதக்கிவிட வேண்டும். பத்து நிமிட நேரம் வதக்கியதும் குக்கரை மூடி மூன்று நிமிட நேரம் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஓவன் வசதியிள்ளவர்கள் இந்தக் கோழியை எடுத்து கிரில்லில் வைத்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். ஓவன் வசதி இல்லாதவர்கள் ஒரு கம்பியில் குத்தி தணலில் வாட்டிக் கொள்ள வேண்டும்.
பரிமாறும் பொழுது தேவையான அளவில் பெரிய துண்டுகள் செய்து எலுமிச்சம்பழ ரசத்தை மேலாக விட்டு வட்டமாக நறுக்கிய வெங்காயத்துடன் பரிமாறவும்.
Post a Comment