சமையல் குறிப்புகள்! செட்டிநாட்டு கமகம மீன் குழம்பு
செட்டிநாட்டு மீன் குழம்பு போல சும்மா கமகமன்னு வைக்க என்னென்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம்? கமகம மீன் குழம்புக்கு விரால் மீன் (அ) மற்ற வகை மீ...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6168.html
செட்டிநாட்டு மீன் குழம்பு போல சும்மா கமகமன்னு வைக்க என்னென்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம்?
கமகம மீன் குழம்புக்கு விரால் மீன் (அ) மற்ற வகை மீன்-2, சின்ன வெங்காயம்-10, நறுக்கிய பெரிய வெங்காயம்-1, தக்காளி-2, பச்சை மிளகாய்-2, பூண்டு-10 பல், தனிமிளகாய்த் தூள்-3 டீஸ்பூன், மல்லித்தூள்-2 டீஸ்பூன், மிளகு, வெந்தயம், சோம்பு, சீரகம் தலா-1 டீஸ்பூன், புளி- ஒரு எலுமிச்சை அளவு, உப்பு-3 டீஸ்பூன், நல்லெண்ணெய்-4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
முதலில் மீனைச் சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி, உப்பு போட்டு உரசிக் கழுவவும். உப்பு மற்றும் புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து நறுக்கவும். தக்காளியை நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லித்தூள், மிளகு, சோம்பு, சீரகத்துடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் சோம்பு, சீரகத்தை போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போட்டு வதக்கவும். அத்துடன் அரைத்த மிளகாய் விழுது மஞ்சள் பொடி சேர்த்து மேலும் நன்றாக வதக்கி, உப்பு, புளிக்கரைசலைக் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து கெட்டியானதும், ஏற்கெனவே சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைக்கவும். இந்த மீன் குழம்பு ‘கமகம’ என்று கோல்டன் கலரில் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

Post a Comment