தேவையானவை: புழுங்கல் அரிசி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு (மோரில் போட்டு பிழிந்து வைக்கவும்) - தலா ஒரு கப், வெந்தயம், உளுத்தம்பருப்பு - 2 டீ...

தேவையானவை: புழுங்கல் அரிசி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு (மோரில் போட்டு பிழிந்து வைக்கவும்) - தலா ஒரு கப், வெந்தயம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியுடன் வெந்தயம், உளுத்தம்பருப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு தாளித்து, பிழிந்த வாழைத்தண்டை போட்டு வதக்கவும். இதை அரைத்த மாவில் கொட்டி, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அடுப்பில் பணியாரக் குழி சட்டியை வைத்து, காய்ந்ததும் குழிகளில் தலா ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும். பணியார மாவை எல்லா குழிகளிலும் விட்டு, இருபுறமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற பணியாரம் இது
Post a Comment