ஃபாஸ்ட்ஃபுட் மேளா! பட்டாணி டோக்ளா
தேவையான வை: பச்சைப் பட்டாணி, கடலை மாவு - தலா ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அர...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_2628.html
தேவையான
வை: பச்சைப் பட்டாணி, கடலை மாவு - தலா ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், வெள்ளை எள்- ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப், தேங்காய் துருவல், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: பட்டாணியுடன் பச்சைமிளகாய், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கடலைமாவுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஃப்ரூட் சால்ட்டில் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு, சிறிது பொங்கியதும் கரைத்து வைத்துள்ள மாவுக் கலவையில் கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் மாவுக் கலவையைக் கொட்டி ஆவியில் வேக வைத்து, ஆறியதும் துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, எள்ளைத் தாளித்து பெருங்காயத் தூள் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர், மீதி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் வெட்டி வைத்துள்ள டோக்ளாக்களின் மேல் பரவினாற்போல் விட்டு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment