சமையல் குறிப்புகள்! பலாப்பழ இனிப்பு பொங்கல் --கோதுமை ஓமப்பொடி--கோதுமை ஓமப்பொடி
பலாப்பழ இனிப்பு பொங்கல் தேவையானவை: பொடியாக நறுக்கிய நன்கு பழுத்த பலாப்பழம் & ஒரு கப், பச்சரிசி & 2 கப், நெய் ஒரு & கப், சர்க...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_17.html
பலாப்பழ இனிப்பு பொங்கல்
தேவையானவை: பொடியாக நறுக்கிய நன்கு பழுத்த பலாப்பழம் & ஒரு கப், பச்சரிசி & 2 கப், நெய் ஒரு & கப், சர்க்கரை & ஒரு கப், முந்திரி (துண்டுகளாக்கியது) & ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு & 5, ஏலக்காய் & 10.
செய்முறை: முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் உலை வைத்து காய்ந்ததும் அரிசியைக் கழுவி, கல் நீக்கி போடவும். சாதம் முக்கால் பதம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகள், சர்க்கரை, கிராம்பு, முந்திரிப் பருப்பு, பொடி செய்த ஏலக்காயைச் சேர்த்துக் கிளறவும். நெய்யை ஊற்றி, நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும். சாதாரண சர்க்கரை பொங்கலைவிட, பலாப் பழப் பொங்கல் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
பலாப்பழ இனிப்பு பொங்கல்: இதில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
கோதுமை ஓமப்பொடி
தேவையானவை: கோதுமைமாவு & கால் கப், கடலைமாவு & கால் கப், சீரகம் & கால் டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், ஓமம் & அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கோதுமைமாவை ஒரு காய்ந்த துணியில் சுற்றி அரை மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இத்துடன் ஓமம், சீரகம் இவை இரண்டையும் தூள் செய்து போடவும். கடலைமாவு சேர்க்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். சுவைமிகு ஓமப்பொடி ரெடி.
கோதுமை ஓமப்பொடி: மாவுடன் சிறிது வெண் ணெயைக் கலந்தால் ஓமப்பொடி மிகவும் மிருதுவாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இன்ஸ்டன்ட் டேஸ்டி கீர்
தேவையானவை: பாசிப் பருப்பு & கால் கப், முந்திரி & கால் கப், கேசரி பவுடர் & சிறிது, பால் & 2 கப், சர்க்கரை & 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் & 4.
செய்முறை: பாசிப்பருப்பையும், முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி அதில் வறுத்து அரைத்த பொடியுடன், ஏலப்பொடி சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். பின்னர் சர்க்கரையையும் சேர்க்கவும். மிகவும் ருசியான கீர் இது.
இன்ஸ்டன்ட் டேஸ்டி கீர்: இதனுடன் சிறிது பாதாம் பருப்பையும் வறுத்து அரைத்து சேர்த் தால் சுவை கூடும். செய்யும்போது குங்குமப்பூ சிறிது சேர்த்தால் மேலும் ருசி அதிகரிக்கும். கலர் சேர்க்கத் தேவையில்லை.



Post a Comment