தேவையான பொருட்கள்:- சிறிய கத்தரிக்காய் - 250 கிராம் எண்ணெய் - 7 டேபிள் ஸ்பூன் வெங்காயம் பெரியது - 2 தக்காளி பெரியது - 2 பச்சைமிளகாய் - 3 க...

தேவையான பொருட்கள்:-
சிறிய கத்தரிக்காய் - 250 கிராம்
எண்ணெய் - 7 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் பெரியது - 2
தக்காளி பெரியது - 2
பச்சைமிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - ½ டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடுகு, வெந்தயம் - தாளிக்க.
இவைதவிர கத்தரிக்காய் பொரிக்கத் தேவையான எண்ணெய்.
செய்முறை:-
கத்தரிக்காயை கொண்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் 4-ஆக வெட்டிக் கொள்ளவும். கத்தரிக்காயை வடை பொரிப்பது போல் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போடவும். வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் மிளகாய், தனியா, மஞ்சள், உப்பு சேர்த்து அதையும் சேர்க்கவும், நன்கு வதங்கியதும் பொரித்த கத்தரிக்காயைப் போடவும்.
அடுப்பைக் குறைத்துவிட்டு மூடிவிடவும். 2 அ 3 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி விடவும். பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள எண்ணெய் கத்தரிக்காய் தயார்.
------------------------------------------------------------------------------------
Post a Comment