வி.ஐ.பி. ஹெல்த்! எளிய உடற்பயிற்சிகள் சில...

ஹாய். எப்படி இருக்கீங்க? இப்படிப் பார்த்து நம்ம மனசு தினமும் கேக்கணும். இப்படிக் கேக்குறதுக்கு பழக்கப்படுத்திட்டீங்கன்னா உங்க உடம்பு மட்டுமல...

ஹாய். எப்படி இருக்கீங்க? இப்படிப் பார்த்து நம்ம மனசு தினமும் கேக்கணும். இப்படிக் கேக்குறதுக்கு பழக்கப்படுத்திட்டீங்கன்னா உங்க உடம்பு மட்டுமல்ல சுத்தி இருக்கிற எல்லாமும் நலமா இருக்கும். 1. பயிற்சி எல்லாம் முடிஞ்சதும் அவசர வாழ்க்கைக்குத் திரும்பிடாதீங்க. இப்படி தியானம் பண்ணப் பழகிக்குங்க. முதல்ல மனசு கேக்காது. அடக்கி ஆளுங்க. இந்த அமைதியான தியானத்தால் நீங்க முன்னாடி செஞ்ச எல்லா பயிற்சியின் பலமும் உங்கள் உடல் முழுதும் பரவி புது தெம்பைக் கொடுக்கும் 2. ரொம்ப நாளா இந்தச் சுவரை தள்ளலாம்னு பார்க்கிறேன் முடியல. சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன். இரண்டு சாண் கை இடைவெளி விட்டுக்குங்க. கால் இரண்டும் மடக்காம நேரா இருக்கணும். முன்னுக்கும் பின்னுக்கும் நெஞ்சைக் கொண்டு போங்க. 15 தடவை மூச்சை இழுத்து விட்டு செய்யுங்க. ‘முன்னழகுப் பேரழகி’ பிறகு நீங்கதான். 3. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம். மீன் மாதிரி நழுவுற பளபளப்புப் பெற இப்படி மீன் பயிற்சி செய்ங்க. பிறகு நீங்கதான் விலாங்கு மீன். 4 இந்தப் பயிற்சி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா சிரமம் பார்க்காம தினமும் செஞ்சா அடி வயிறு ஒட்டி அழகா இருப்பீங்க. தினமும் 25 தடவை செஞ்சிப் பாருங்க. 5. அடிவயிற்றுக்கும் இடுப்புக்கும் சேர்த்து டூ இன் ஒன் பயிற்சி இது. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் என்பாங்க. இந்தப் பயிற்சியும் அப்படித்தான். 6. அசையாம செய்யப் பாருங்க. இரத்த ஓட்டம் முழுசும் உங்க முகத்துக்குப் போகும். இதனால் உங்க முக அழகு பொலிவுறும் 7. வில்லு அம்பு ... அம்பு வில்லு ... இரண்டும் ஒண்ணுதானுங்க. கையைக் காலை ஆட்டாம இத செஞ்சிப் பாருங்க. அடுத்த ‘இஞ்சி இடுப்பழகி’ நீங்கதானுங்க. 8. காலும் கையும் ஒரே அளவு இருக்குற மாதிரி பார்த்துக்குங்க. மாறி மாறி இரண்டு பக்கமும் செஞ்சிப் பாருங்க. தொடை, கை, இரும்பு மாதிரி ஆகிடும். 9. கால் பக்கத்துல கையை கரெக்ட்டா வச்சிக்குங்க. பிறகு இடுப்ப சீராக வளைச்சிக்குங்க. ரொம்ப பென்டாகாம வளையுங்க. ஒண்ணுல இருந்து பதினஞ்சு வரைக்கும் எண்ணுன பிறகு மெதுவா நிமிருங்க. முழு உடம்பும் சும்மா கன்னுன்னு இருக்கும் பாருங்க.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7701221698451923672

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 11:28:37 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,378

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item