தேவையான பொருட்கள் மட்டன் - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 50 கிராம் பட்டை - 5 கிராம் இலவங்கம் - 3 கிராம் பூண்டு - 25 கிராம் இ...

தேவையான பொருட்கள்
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பட்டை - 5 கிராம்
இலவங்கம் - 3 கிராம்
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - 15 கிராம்
புத்தம்புதிய கறிவேப்பிலை - 2 கொத்து
பால் - 50 மில்லி
முந்திரித் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - 50 கிராம்
எண்ணை - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கவும், இஞ்சி, பூண்டுவை விழுதாக்கிக் கொள்ளவும்.
எண்ணையை சூடு செய்து, எல்லா கறிமசாலாக்கள், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும்வரை வதக்கவும்.
பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும், நன்கு கிளறி நீரை தெளிக்கவும்.
முந்திரி தேங்காய் துண்டுகளுடன் சேர்த்து தக்காளியை போடவும்.
வறுத்த கறிவேப்பிலையால் உடன் அலங்கரிக்கவும்.
இதை சாதம் அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.
சிறந்த சுவை பெற தேங்காய்த் துண்டுகளை தேங்காய் எண்ணையில் வறுக்கலாம்.
Post a Comment