சுவையான ஒரு காராபூந்தி இதோ... ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுத்து, அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றைக் கலந்து விட்டா...

சுவையான ஒரு காராபூந்தி இதோ... ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுத்து, அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றைக் கலந்து விட்டால், சுலபமான, சுவையான இன்ஸ்டன்ட் காராபூந்தி ரெடி!
‘எனக்கு முறுக்கு மாவு அரைக்க பக்குவம் எல்லாம் தெரியாதே!’ எனக் கையைப் பிசைய வேண்டாம். இதோ, ஒரு சுலபமான முறுக்கு... பாசிப்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொண்டு அதனுடன் நான்கு டம்ளர் அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, பெருங் காயத்தூள் சேர்த்துப் பிசைந்து முள்ளு முறுக்கு செய்து பாருங்கள். டால்டா, வெண்ணெய் சேர்க்காமலேயே மொறு மொறுவென்று வாயில் கரையும் இந்த முறுக்கு!
பயத்தம் பருப்பை பத்து நிமிடம் ஊறவைத்து, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு பெருங் காயம் சேர்த்து மிக்ஸியில் சில விநாடிகள் சுற்றி, கரகரப்பாக அரைத்து எடுத்து வடை சுடுங்கள். பத்தே நிமிடத்தில் வடை ரெடி!

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பிசையும்போது, பிசைந்த கை உலர்ந்து போய், கழுவ கஷ்டமாக இருக்கிறதா? கையை ஈரப்படுத்திக் கொண்டு, பாத்திரம் தேய்க்கும் ஒரு பிளாஸ்டிக் நாரைப் பிடித்துக் கொண்டு விரல்களால் பிசையுங்கள். சில நொடிகளில் கையைக் கழுவினால் அதிக நேரமும் தண்ணீரும் செலவழியாமல், கை சுத்தமாகிவிடும்.
பாக்கெட்டுகளில் நெய், வெண்ணெய் டால்டா முதலியன வாங்கி வந்தால் ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். அவை கெட்டியாகி விடும். பிறகு, மெதுவாக மேலே உள்ள கவரை எடுத்துவிட்டால், கொஞ்சம்கூட வீணாக்காமல் அவற்றுக்குரிய பாத்திரங் களில் எடுத்து வைத்துவிடலாம்.

பருப்புகள், பட்சணங்கள் போட்டு வைக்க வாங்கும் பெட் ஜார்களை சுற்றியுள்ள ஸ்டிக்கரை பிரித்தபின், அந்தப் பசை ‘சொரசொர’வென்று போகவே போகாது. அதற்கு ஒரு ஐடியா... கடைகளில் விற்கும் பார்டர் கோல ஸ்டிக்கர்களை வாங்கிவந்து, பெட் ஜார்களைச் சுற்றி, ஸ்டிக்கர் இருந்த இடத்தில் ஒட்டிவிடுங்கள். பட்சண ஜார்கள், வண்ணத்தில் பளபளக்கும்!
Post a Comment