தவலை வடை தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா கால் கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப்...
தவலை வடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா கால் கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பு தவிர மற்ற பருப்புகளை பச்சரிசி, புழுங்கலரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். ஊறிய அரிசி மற்றும் பருப்பு கலவையுடன் மிளகாய், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தனியாக ஊற வைத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்க்கவும்.
அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து மாவில் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் குழி கரண்டியால் இந்த மாவை எடுத்து ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
தவலை வடை: வடை மாவு சற்று நீர்த்து இருந்தால் கால் கப் வேர்க்கடலையை லேசாக வறுத்து, கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம்.
--------------------------------------------------------------------------------
Post a Comment