தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ஃப்ரெஷ் பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சைக் கொட்டை, பட்டாணி (கலந்தது) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங...

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ஃப்ரெஷ் பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சைக் கொட்டை, பட்டாணி (கலந்தது) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பட்டை - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். அதனுடன், சீரகம், தனியா, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். ஃப்ரெஷ் பீன்ஸ்களைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவும். வதங்கியதும், அரிசியைப் போட்டு ஒருமுறை கிளறி... உப்பு, தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
Post a Comment