திராட்சை - தக்காளி ரசம் தேவையானவை: நறுக்கிய தக்காளி - கால் கப், பச்சை திராட்சை - கால் கப், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கா...
திராட்சை - தக்காளி ரசம்
தேவையானவை: நறுக்கிய தக்காளி - கால் கப், பச்சை திராட்சை - கால் கப், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, துவரம்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒன்றரை கப், கறிவேப்பிலை, கடுகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், மிளகாய், தனியா துவரம்பருப்பு, பெருங்காயத்தூளை வறுத்து பொடிக்கவும்.
தக்காளி, திராட்சை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, நெய், வறுத்த பொடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
இதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். பிறகு துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும். ரசம் பொங்கி வரும்போது இறக்கி வைத்து நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
திராட்சை - தக்காளி ரசம்: ரசத்தை இறக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறும், இரண்டு கீறிய பச்சை மிளகாய்களையும் சேர்த்தால் சுவை கூடும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment