கேரட், அவல் பாயசம் தேவையான பொருட்கள் : கன்டென்ஸ்டு மில்க்-1 கப், பால்-2 கப், கேரட் துருவல், ஊற வைத்த அவல்-½ கப், ஏலக்காய்த் தூள்-½ டீஸ்பூ...
கேரட், அவல் பாயசம்
தேவையான பொருட்கள் : கன்டென்ஸ்டு மில்க்-1 கப், பால்-2 கப், கேரட் துருவல், ஊற வைத்த அவல்-½ கப், ஏலக்காய்த் தூள்-½ டீஸ்பூன்.
செய்முறை : பெரிய பாத்திரத்தில் பாலையும், மில்க் மெய்டையும் நன்றாக கலந்து, அதில் கேரட் மற்றும் அவலைக் கலந்து, அவனில் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ஹையில் வைத்து இறக்கி ஏலக்காய்த் தூளைத் தூவி பறிமாறவும்.
(சுகர் பிரச்னை இருப்பவர்கள் மில்க் மெய்டு சேர்க்காமல் வெறும் பாலில் செய்யலாம்.)
பட்டர் பனீர்
தேவையான பொருட்கள் : பச்சைப் பட்டாணி - 1 கப், நறுக்கிய பனீர் -1½ கப், தக்காளிச் சாறு - 3 கப், வெங்காயம் பொடியாக நறுக்கியது - ½ கப், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் - தலா 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய்த்தூள் - தலா ½ டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மைக்ரோவேவ் அவனில் பட்டாணியை அரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து 3 நிமிடம் ஹையில் வேக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அவனில் 30 விநாடிகள் ஹையில் வைக்கவும்.
பிறகு அதை வெளியே எடுத்து வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும்.
பிறகு இதில் மசாலாப் பொடிகளுடன், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கலக்கி ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும்.
இந்தக் கலவையுடன் பச்சைப் பட்டாணி மற்றும் பனீர் சேர்த்து ஒரு நிமிடமும், தக்காளிச் சாறு சேர்த்து 3 நிமிடமும் ஹையில் வைத்து கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி இறக்கவும்.
அவியல்
தேவையான பொருட்கள் : நீளவாட்டில் நறுக்கிய காய்கறிகள் (கலவையாக) - 5 கப், தேங்காய்த் துருவல் - 2 கப், சீரகம் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) வர மிளகாய், உப்பு - தேவையான அளவு, கெட்டியான தயிர் - 1 கப், மல்லி, கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை : காய்கறிகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அவனில் 5 நிமிடங்கள் ஹையில் வைத்தால் காய்கறிகள் வதங்கி இருக்கும். நிறம் மாறாது. தேங்காய், சீரகம், மிளகாயைப் பேஸ்ட்டாக அரைக்கவும். காய்களுடன் இந்த பேஸ்ட்டைச் சேர்த்து முள் கரண்டியால் உடையாமல் கிளறி இதை மறுபடியும் ஒரு நிமிடம் ஹையில் வைக்கவும்.
தயிரைக் கட்டி இல்லாமல் கடைந்து அதை வெந்து தயாராகவுள்ள அவியலுடன் கலந்து மீண்டும் ஒரு நிமிடம் ஹையில் வைத்து கீழே இறக்கி மல்லி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். இந்த அவியலுக்கு எண்ணையே தேவையில்லை.
Post a Comment