தேவையான பொருட்கள்:- ஆட்டுக்கறி - 1 கிலோ பிரியாணி அரிசி (பாசுமதி) - 1½ கிலோ பட்டை - 3 (1 அங்குலம்) லவங்கம் - 10 ஏலக்காய் - 5 ரீபைண்ட் ஆயில்...

தேவையான பொருட்கள்:-
ஆட்டுக்கறி - 1 கிலோ
பிரியாணி அரிசி (பாசுமதி) - 1½ கிலோ
பட்டை - 3 (1 அங்குலம்)
லவங்கம் - 10
ஏலக்காய் - 5
ரீபைண்ட் ஆயில் - 250மி.லி.
இஞ்சி, பூண்டு அரைத்தது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பச்சைமிள்காய் - 10
சிகப்பு மிளகாய் தூள் - 1½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
எலுமிச்சை - 1 பெரியது
தயிர் - 1 கப்
புதினா - 1 கைபிடி
கொத்தமல்லி - 2 கைப்பிடி
பிரியாணி கலர் - சிறிதளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேவையான அளவு உப்பு.
செய்முறை:-
கறியைச் சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொண்டு, பெரிய சட்டியாக அடுப்பில் வைத்து முதலில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போடவும்.
அதன்பின் நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தைப் போடவும், சிவந்ததும் அரைத்த இஞ்சி பூண்டு விழுதைப் போடவும்.
அதுவும் சிவந்ததும் கறி, தேவையானஉப்பு, பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் வதங்கியதும் பிறகு தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லி, இவைகளைப் போட்டு வதக்கிக் கொண்டு கடைசியாகத் தயிர், எலுமிச்சை சாறு சேர்க்கவும். மெதுவான தீயில் வேகவிட்டுவிட்டு அடுத்த அடுப்பில் சாதத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் வைத்துக் கொதிக்கவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கழுவி கொண்டு சிறிது நேரம் ஊறவிடவும். தண்ணீர் கொதித்த பிறகு அரிசியைப் போடவும் அதற்குத் தேவையான உப்பையும் போடவும்.
அரிசி பாதிக்கும் கொஞ்சம் கூட வெந்ததும் வடித்துவிட வேண்டும். கறி வெந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டு, சாதத்தை அதில் கொட்டவும். அடுப்பை நன்றாகக் குறைத்து கொள்ளவும்.
பிறகு பிரியாணி கலரை ஒரு டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து சாதத்தின் மேல் வட்டமாக ஊற்றவும் 2 ஸ்பூன் நெய்யையும் அதன் மேல் ஊற்றவும். மூடிவிடவும். சாதம் வடித்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து அதை பிரியாணி பாத்திரத்தின் மூடியின் மேல் வைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் இருந்தால் போதும்.
இப்படி செய்வதைத்தான் தம் போடுவது என்று சொல்லுவோம். மொத்தமாக பிரியாணியை கிளறிவிட்டால் சாதம் ஆறிப்போய் விடும். அதனால் தேவைக்கு தக்க கிளறி சாப்பிட வேண்டியதுதான்.
------------------------------------------------------------------------------------
Post a Comment