சமையல் குறிப்புகள்! பேரீச்சம்பழ பாயசம்.

தேவையானவை பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப் தேங்காய்ப் பால் - 1 கப் வெல்லம் நறுக்கியது - 1/4 கப் ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை பச்சைக...

தேவையானவை பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 1 கப் தேங்காய்ப் பால் - 1 கப் வெல்லம் நறுக்கியது - 1/4 கப் ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை செய்முறை * கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். * வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும். * ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும், * ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். உபயோகமான குறிப்பு தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். சுவைக்கான குறிப்பு ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம். மற்ற பாயாசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயாசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே! இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். நம்முடைய முழுமையான ஆரோக்கியத்திற்கு உகந்த உயர்ந்த நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சல்பர் போன்ற மினரல்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்கள் அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிய சிறப்புக்குரியது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது. ஒரு பேரீச்சம் பழத்தில் 23 கலோரிகள் உள்ளன என்பது வரப்பிரசாதம். இயற்கையின் மற்றொரு இனிப்பு வரப்பிரசாதம் வெல்லம். எந்த விதமான ரசாயனங்களோ, பல பொருட்களின் சேர்க்கையோ உபயோகப்படுத்தாமல் இயற்கையான கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், காப்பர் போன்ற மினரல்கள் மற்றும் மிதமான நார்ச்சத்து நிறைந்தது. நம் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய வல்லது வெல்லம். தூசு தும்பு நிறைந்த இடங்களில் வேலை செய்வோர் அளவாக வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்களுடைய மூச்சுக்குழாய் தூசியினால் அதிகம் பாதிக்கப்படாது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் மூச்சுவிடும் குழாயை சுத்தமாக்கும் சக்தி வாய்ந்ததாம் வெல்லம். இரும்புச்சத்து மிக்க வெல்லத்தை பெண்கள் உட்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால்தான், பூப்பெய்துவதில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை அளவாக பெண்கள் வெல்லம் உட்கொள்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர் போலும். செரிமானத் தன்மையை அதிகரிக்க வல்ல ஏலக்காய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததும் கூட. ஏலக்காய் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற மினரல்கள் நிறைந்த ஏலக்காயில் ஓரளவிற்கு இரும்புச்சத்தும் இருக்கிறது. நாவை இனிக்க வைக்கும் இனிப்புகளான பேரீச்சம் பழம் மற்றும் வெல்லத்துடன் தன் அதிவாசனையால் மனதை ஈர்க்கும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இனிக்க இனிக்க பேரீச்சம்பழ பாயசம் செய்யலாம்.

Related

சமையல் குறிப்புகள் 5549107127068933197

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item