சமையல் குறிப்புகள்! முட்டை கட்லெட் குழம்பு தேவாமிர்தமும் தோற்கும்!
முட்டை கட்லெட் குழம்பு தேவையானவை: முட்டை-6, கேரட் துருவல்-அரை கப், பொட்டுக் கடலை மாவு-கால் கப், மிளகாய்-6, இஞ்சி-சிறு துண்டு, சோம்பு-அரை ஸ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9230.html
முட்டை கட்லெட் குழம்பு
தேவையானவை: முட்டை-6, கேரட் துருவல்-அரை கப், பொட்டுக் கடலை மாவு-கால் கப், மிளகாய்-6, இஞ்சி-சிறு துண்டு, சோம்பு-அரை ஸ்பூன், தனியா-2 டீஸ்பூன், கசகசா -2 ஸ்பூன், பூண்டு பல்-6, தேங்காய்- 1 மூடி, பெரிய வெங்காயம்-1, தக்காளி-3, சீரகம்-கால் டீஸ்பூன், உப்பு, மல்லி, நல்லெண்ணெய் மூன்றும் தேவையான அளவு.-
பூண்டு, இஞ்சியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். மிளகாயை வதக்கி மை போல் அரைத்துக்கொள் ளவும். வெங்காயம், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். மசாலா பொருட்களைத் தனியாக வறுத்த பின்பு, அவற்றை தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
முட்டைகளை இப்போது நன்றாக அடிக்கவும். அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டுக் கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, சிறிது நெய் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும். ஆறிய பின்பு, தனியாகக் கிண்ணத்தில் எடுத்துவைக்கவும். இதுதான் கட்லெட். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பூண்டு&இஞ்சி பேஸ்ட்&ஐப் போட்டு வதக்கவும். எண்ணெய் பிரியும்போது, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன் நிறமாகும்படி வதக்கவும். அடுத்து, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இப்போது, அரைத்துவைத்துள்ள மசாலா சாமான்கள், மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் இதில் போட்டு, 2 கப் தண்ணீர்விட்டு 20 நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு, கலவையை ஓர் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, கட்லெட்டுகளை அதில் போட்டு, அரை மணி நேரம் ஊறவைக்கவும். கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி மேலே தூவிவிட்டால், குழம்பு ரெடி! பூரி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு இதைத் தொட்டுக்கொண்டால் தேவாமிர்தமும் தோற்கும்!
Post a Comment