சமையல் குறிப்புகள்! பாகற்காய் பொரியல்
பாகற்காய் பொரியல் தேவையான சாமான்கள் = பாகற்காய் 500 கிராம், எலுமிச்சம்பழ ஜூஸ் 6 டேபிள் ஸ்பூன், பெரிய கோலி அளவு புளி, வெல்லத்தூள் 2 டேபிள் ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3721.html
பாகற்காய் பொரியல்
தேவையான சாமான்கள் = பாகற்காய் 500 கிராம், எலுமிச்சம்பழ ஜூஸ் 6 டேபிள் ஸ்பூன், பெரிய கோலி அளவு புளி, வெல்லத்தூள் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை = பாகற்காயைச் சிறியதாக அரிந்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு எலுமிச்சம் பழசாற்றில் இவைகளை அரைமணி நேரம் ஊறவைக்கவும், மிளகாய், புளி, உப்பு, பெருங்காயம், வெல்லத்தூள் முதலியவற்றை மசிய அரைக்கவும், அரைத்த மசாலாவைப்பாகற்காயில் போட்டுக்கலந்து வைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் கலந்து வைத்திருக்கும் பாகற்காயைப் போடவும். பாகற்காய் வதங்கியவுடன் பொட்டுகடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து வதக்கினால் நன்றாக இருக்கும்
Post a Comment