சமையல் குறிப்புகள்! கீரை ஆம்லெட்
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்! கீரை ஆம்லெட் தேவையானவை: முளைக்கீரை, வெந்தயக்கீரை & தலா ஒரு சிறிய கட்டு, 1 : 2 என்ற விகிதத்தில் கடலைமா...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_5799.html
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்!
கீரை ஆம்லெட்
தேவையானவை: முளைக்கீரை, வெந்தயக்கீரை & தலா ஒரு சிறிய கட்டு, 1 : 2 என்ற விகிதத்தில் கடலைமாவு & சோளமாவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் & அரை கப், பச்சைமிளகாய் & 4, உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கீரைகளை நன்றாகக் கழுவி, ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கி, கடலைமாவு, சோளமாவு கலந்து உப்பு, கீரைகளைச் சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளவும். பிறகு, தோசைக் கல்லில் முட்டை ஆம்லெட் போல ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிற மாக வெந்ததும் திருப்பி போடவும். அசத்தல் சுவையில் கீரை ஆம்லெட் ரெடி!
--------------------------------------------------------------------------------
Post a Comment