சமையல் குறிப்புகள்! ரவை சீடை
தேவையான சாமான்கள் = சன்ன ரவா 6 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 4 டேபிள் ஸ்பூன், மைதா மாவு 4 டேபிள் ஸ்பூன், வெள்ளை எள் 2 டீஸ்பூன், தேங்காய் 1 மூடி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1596.html
தேவையான சாமான்கள் = சன்ன ரவா 6 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 4 டேபிள் ஸ்பூன், மைதா மாவு 4 டேபிள் ஸ்பூன், வெள்ளை எள் 2 டீஸ்பூன், தேங்காய் 1 மூடி (பாதி), வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம், உப்பு, எண்ணெய், தேவையான அளவு.
செய்முறை = எள்ளைத்தண்ணீரில் நனைத்து வைக்கவும், தேங்காயைத்துருவி அரைத்துக்கெட்டியாக பாலெடுத்து (தண்ணீர் விட வேண்டாம்) வடிகட்டவும். சீடை உருட்டிப்போட துணி வைத்துக்கொள்ளவும். சீடை சில சமயம் எண்ணெயில் போட்டவுடன் வெடிக்கும், அதனால் பிளாஸ்டிக் பேப்பரில் போட வேண்டாம். குறிப்பிடப்பட்டிருக்கும் மாவுகள், வெண்ணெய், பெருங்காய நீர், எள், உப்பு, தேங்காய்ப்பால் முதலியவற்றைக் கலந்து, திட்டமாகத் தண்ணீர் விட்டு, கெட்டியாக மாவு கலந்து, சிறிய கோலி அளவில் சீடை உருட்டி வேக வைக்கவும்.
Post a Comment