சமையல் குறிப்புகள்! ஓட்ஸ் அடை
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்! ஓட்ஸ் அடை தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கப், பிரெட்தூள் & அரை கப், பொட்டுக்கடலை மாவு & அரை கப், மிள...
https://pettagum.blogspot.com/2011/02/2_19.html
ஐந்தே நிமிடத்தில் அசத்தல் சமையல்!
ஓட்ஸ் அடை
தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கப், பிரெட்தூள் & அரை கப், பொட்டுக்கடலை மாவு & அரை கப், மிளகாய்தூள் & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, மல்லித்தழை & சிறிதளவு, எண்ணெய் & கால் கப்.
செய்முறை: ஓட்ஸ், பிரெட்தூள், பொட்டுக்கடலை மாவு, மிளகாய்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, திட்டமாகக் கரைத்துக் கொள்ளவும். மல்லித் தழையைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். தோசைக்கல்லில் கெட்டியாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறு மொறுவென எடுத்தால் ஓட்ஸ் அடை ரெடி!
இதில் வெங்காயம், கீரையை நறுக்கி சேர்க்கலாம். மீந்து போன பொரியல் வகைகளைச் சேர்த்து வெஜிடபிள் அடையாக்கலாம். மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வடை போல பொரித்து எடுக்கலாம். தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி கட்லெட் போன்றும் செய்யலாம்.
காம்பினேஷன் மாற மாற பலவித அவதாரங்கள் எடுக்கும் ‘ஓஹோ’ டிபன் இது!
Post a Comment