சமையல் குறிப்புகளில் ‘ஒரு கப்’--ஒரு டேபிள்ஸ்பூன்,----ஒரு டீஸ்பூன் என்பதன் அளவுகள்
‘‘இணையத்தில் வெளியாகும் சமையல் குறிப்புகளில், தேவையான பொருட்களின் அளவு பற்றிக் கூறும்போது, ‘ஒரு கப்’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘ஒரு கப்’ எ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8174.html
‘‘இணையத்தில் வெளியாகும் சமையல் குறிப்புகளில், தேவையான பொருட்களின் அளவு பற்றிக் கூறும்போது, ‘ஒரு கப்’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘ஒரு கப்’ என்பது எத்தனை கிராம்? அதேபோல், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு டீஸ்பூன் போன்றவற்றையும் எவ்வளவு அளவு என்று விளக்கினால் உதவியாக இருக்கும்!’’
’’ஒரு கப் என்பது பொதுவாக, திடப்பொருள்களாக இருந்தால் 200 கிராம் அளவைக் குறிக்கும். திரவப் பொருள்களாக இருந்தால், 210 மி.லி.யைக் குறிக்கும். உதாரணத்துக்கு, 5 கப் பருப்பு என்றால் 1 கிலோ பருப்பு என்று கொள்ளலாம். ஆனால், ரவை, மைதா, கோதுமை மாவு போன்ற பொருட்களை அளக்கும்போது, இது சிறிது வித்தியாசப்படும். அவை, ஒரு கிலோவுக்கு 5 கப்பை விட சிறிது அதிகமாக இருக்கும். திரவப் பொருள்களில் ஒரு லிட்டருக்கு நாலரை முதல் 5 கப் வரையில் கொள்ளும். தமிழ்நாட்டு வழக்கப்படி, ஒரு ஆழாக்கு என்பது ஒரு கப். ஒரு டீஸ்பூன் என்பது 5 கிராம் அல்லது 5 மி.லி.யைக் குறிக்கும். ஒரு டேபிள்ஸ்பூன் என்பது 3 டீஸ்பூன் அளவு. அதாவது 15 கிராம்’’.
Post a Comment