சமையல் குறிப்புகள்! தக்காளி ஆம்லெட்
தேவையானவை: தக்காளி, கடலை மாவு & தலா அரை கிலோ, பெரிய வெங்காயம் & 3, மல்லித்தழை & அரை கட்டு, பச்சைமிளகாய் & 6 (அ) 7, இஞ்சி &a...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8014.html
தேவையானவை: தக்காளி, கடலை மாவு & தலா அரை கிலோ, பெரிய வெங்காயம் & 3, மல்லித்தழை & அரை கட்டு, பச்சைமிளகாய் & 6 (அ) 7, இஞ்சி & ஒரு பெரிய துண்டு, புதினா (அ) கறிவேப்பிலை- & -- சிறிதளவு, உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: தக்காளியைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித் தழை இவற்றைத் தக்காளி விழுதில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கிப் போடவும். புதினா அல்லது கறிவேப்பிலையை நறுக்கிப் போடவும். கடலைமாவுடன் தேவையான உப்பு சேர்த்து எல்லாவற்றையும் கலந்து மெல்லிய தோசைகளாக வார்க்கவும். தக்காளி சாறு போதவில்லையென்றால், சிறிது தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடலை மாவுக்கு பதில் கோதுமை மாவு சேர்த்தும் செய்யலாம். தொட்டுக்கொள்ள, எல்லா வகை சட்னியும் ஏற்றது.
Post a Comment