ஆரோக்கிய சமையல்! காய்கறி வதக்கல்
காய்கறி வதக்கல் தேவையானவை: காலிஃப்ளவர், கோஸ், பீன்ஸ், குடமிளகாய், கேரட், அவரை, சௌசௌ எல்லாம் கலந்த பச்சை காய்கறிகள் & 2 கப், வெங்காயம் &...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7996.html
காய்கறி வதக்கல்
தேவையானவை: காலிஃப்ளவர், கோஸ், பீன்ஸ், குடமிளகாய், கேரட், அவரை, சௌசௌ எல்லாம் கலந்த பச்சை காய்கறிகள் & 2 கப், வெங்காயம் & 1, (விருப்பப்பட்டால்) பூண்டு & 4 பல், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் & தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் லேசாக உப்பு சேர்த்து பிசறி தண்ணீர் சேர்க்காமல் ஒரு கிண்ணத்தில் வைக்கவும். குக்கரின் அடியில் தண்ணீர் வைத்து, அதனுள் அந்த காய்கறி கிண்ணத்தை வைத்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி வேகவைத்த காய்கறிகளை அதில் சேர்க்கவும். நன்கு கிளறி, இறக்கும்போது விருப்பப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு விட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: குக்கரில் வேகவைப்பதால், எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
காய்கறி வதக்கல்: காய்கறிகளில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதயத்துக்கு இதமளிக்கும் இந்த காய்கறி வதக்கலை வெறும் சாதத்துடனேயே பிசைந்து சாப்பிடலாம்.
Post a Comment