தென்னிந்திய சமையல்! ஆந்திரா புளிஹாரா
தேவையானவை: பச்சரிசி & 2 கப், நல்லெண்ணெய் & 20 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 2, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை &...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_24.html
தேவையானவை: பச்சரிசி & 2 கப், நல்லெண்ணெய் & 20 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 2, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, புளி & சிறிய உருண்டை, பெருங்காய தூள் & சிட்டிகை, உப்பு & தேவைக்கு, வெல்லத்தூள் & 2 டீஸ்பூன்.
தாளிக்க: நல்லெண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன், கடுகு & கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு & 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 4, பச்சை மிளகாய் & 1, கறிவேப்பிலை & சிறிது. அரைக்க: கடுகு & 1 டீஸ்பூன்.
செய்முறை: சாதத்தை குழையாமல் பக்குவமாக வடிக்கவும். ஒரு பேசினில் வடித்த சாதத்தை சூடாக குவித்து கொட்டவும். குவித்த சாதத்தின் நடுவில் சிறிய பள்ளம் போல செய்யவும். அதில் நல்லெண்ணெய், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து மூடவும். புளியைக் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்த புளியை சேர்க்கவும். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம் சேர்த்து இறக்கி சாதத்தில் சேர்க்கவும். கடுகை பச்சையாக அரைத்து அதையும் சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். ஆந்திரத்தின் மிக பிரபலமான இந்த சாதம், நம்ம ஊர் புளி சாதத் தைப் போன்றது.
Post a Comment