வீட்டுக்குறிப்புக்கள்! நமது இல்லம் நலமாகட்டும்!

நமது இல்லம் * நம்முடையதல்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக்கூடாது. * வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். * வாரம் ஒருநாள...

நமது இல்லம் * நம்முடையதல்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக்கூடாது. * வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். * வாரம் ஒருநாள் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், மற்றும் சமைக்காத உணவுகளை உண்ணவும். * வீட்டில் இறைவனுக்காக பிரத்தியேகமான இடம் அமைக்க வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும். * அதிகாலையில் படுக்கையிலேயே காபி அல்லது தேனீர் அருந்தவேண்டாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக்கூடியது. * நின்று கொண்டே சமைப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகிய பிரச்னைகள் வருவதற்கு இது காரணமாகும். * இதே போன்று டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நமது உணவு செரிப்பதற்கும் மிகவும் நல்லது. நின்று கொண்டே உணவு உண்பது நல்லதல்ல. * ஆண்கள் தாங்களாகவே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்பதை நிறுத்த வேண்டும். மற்றவர்கள் பரிமாறி நாம் உணவு உண்பதில் இருக்கும் ஆனந்தம் நாமே உணவை வைத்துக் கொண்டு உண்பதில் கிடைப்பதில்லை. எதை வேறு வழி இல்லாமல் செய்கிறோமோ அதையே தினசரி வழக்கமாக நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. * வீட்டுப் பாடத்தைக் குழந்தை தானாகவே செய்ய வேண்டும். குழந்தையின் வீட்டுப்பாடத்தைச் செய்திட. அம்மா முனைந்திடக்கூடாது. அம்மாவிற்கும் குழந்தைக்கும் உள்ள சம்பந்தத்தைக் குலைக்க வேண்டாம். குழந்தை தானாக முன்வந்து தாயாரிடம் கேட்டால், தெரிந்த அளவிற்கு ச் சொல்லிக் கொடுக்கலாம். நான்தான் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற மனநிலை நல்லதல்ல; தன் முயற்சி செய்ய குழந்தைகளைப் பழக்க வேண்டும். * வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் அது சரியாக, முறையாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதில் குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். * செலவு செய்யும்போது இது அத்தியாவசியமானது தானா என்று யோசித்து செய்ய வேண்டும். அனாவசியமான செலவு யாருக்கும் கௌரவத்தை அளிப்பதில்லை. வீட்டில் மனஸ்தாபம் உருவாகி விடும். * குழந்தைகள் வெளி மனிதர்களிடம் பேசும்போது, பழகும் போது, தடுமாற்றம் இருக்கும். இதனை பெரிதுபடுத்தாமல் சரியான முறையில் பழகிட கற்றுத்தர வேண்டும். * குழந்தைகள் தினமும் அன்றைய வாரம், மாசம், வருஷம் ஆகியவற்றின் பெயர்களைச் சரியாகச் சொல்வதற்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு இருக்க வேண்டும். அதனை நினைவில் கொண்டுள்ளனரா என்பதை அறிய வேண்டும். * நமது பண்பாட்டின் வார்த்தைகளை வீட்டில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். * வீட்டிலுள்ள அனைவருக்கும் சேமிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு ஆபத்துக் காலங்களில் பயன்படுவதற்காக ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். பண விஷயங்களில் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டியதைக் குறிப்பாகக் கவனிக்கவும். * தூங்கும் முன்பாக இறைவனை பிரார்த்திக்கும் பழக்கம் இருக்க வேண்டும். நாள் முழுவதம் நாம் செய்த செயல்களைப் பற்றி சுத்த சித்தத்துடன் அலசிப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட வேண்டும். *நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல மொழிகள் கற்ற ஒருவருடைய உலகம், மிகவும் விரிந்து விசாலமாக அடையும். முதலில் பேசுவதற்கும், பிறகு படிப்பது மற்றும் எழுதுவதற்கும் பயில வேண்டும். * நமது கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விஷயங்களையும் விரிவான கண்ணோட்டத்தை குழந்தைகளுக்கு அறிந்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். * குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீட்டு முகவரி, தாய், தந்தையர் பெயர், அவர்கள் செய்யும் வேலை, வீட்டுத் தொலைபேசி எண்கள், தந்தையின் அலுவலகத் தொலைபேசி எண் முதலியன கற்றுத்தந்து நினைவில் நிறுத்த பழக்கப்படுத்த வேண்டும். ஆபத்து அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். * அறிமுகம் இல்லாத வெளியாரிடம் வீட்டு விஷயத்தையோ, தகவல்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது என்பதையும் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். * பொது இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிர்க்க குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். * கடிதமெழுதும் பழக்கம் மிகவும் உன்னதமானது. அதனால் கௌரவம் அதிகரிக்கும். * வீட்டில் யாராவது நோய்வாப்பட்டால் பயப்படக்கூடாது. ஆபத்துக்கால முதலுதவி சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். * நோயாளிகள் மகிழ்ச்சியடையும்படி, அவர்களுக்குச் சேவை செய்வது, தேவைகளை முழுமையாகக் கவனிப்பது நலன் பேணுவது இவற்றிற்கும் பயிற்சி இருக்க வேண்டும். * ஒவ்வொரு இளைஞனும் ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை இரத்த தானம் செய்ய வேண்டும். * இறந்த பின்பு கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். * இறப்பு தவிர்க்க முடியாதது. இதனைப் புரிந்து கொண்டு மரணத்தைப் பற்றிய பயமில்லாது இருக்க வேண்டும். * வீட்டில் அனைவருக்கும் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மீது அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ள பண்புப்பதிவை ஏற்படுத்த வேண்டும். * பார்த்த பொருட்கள் அனைத்தையும் வாங்குவதும், அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதும் மேலைநாட்டு கண்ணோட்டம். நமது வீட்டில் வாங்குவது, வாங்கிய பொருளை முறையாக பயன்படுத்தும் கண்ணோட்டம் ஏற்பட வேண்டும். * வீட்டில் நடைபெறும் விழாக்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஆகியவற்றைப் பற்றி விவாதித்து அதன்படி செயல்பட வேண்டி பயிற்றுவிக்கவும். * வரதட்சணையைப் பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் உருவாக்கப்பட வேண்டும். * அதே போன்று பரிசுப் பொருட்கள் பற்றியும், இல்லத்தினர் அனைவருக்கும் ஒரே கருத்து நிலவ வேண்டும். * குழந்தைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். * எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது? தனி நபர், குடும்பம், சமுதாயம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இதைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். * வீட்டில் பிராணிகள் பராமரிக்கப்பட வேண்டும். நமது வீட்டின் பழக்கத்திற்குத் தகுந்தவாறு, பசு, பூனை.... * கழிவறைகள் நமது நாட்டு வகையிலானதாக இருக்க வேண்டும். கபோடுகள் நோயாளிகளுக்கும் தான் பொருத்தமாக இருக்கும். ஆரோக்கியமான இளைஞர்களுக்கல்ல. * வருடத்தில் ஒருமுறை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டும். * தானம் கொடுக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டும். * கை, கால், வாய் கழுவி விட்டுதான் சாப்பாடு சாப்பிட வேண்டும்.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 3824676061106910822

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item